சோஷியல் மீடியா-வில் முதல்வர் ஸ்டாலின் தேடி படிப்பது இதை தான்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார். இடையில் சில மாதங்கள் இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்காமல் இருந்தார். இந்த நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பின்னர் இன்று மீண்டும் ‘உங்களில் ஒருவன்’ நிகழ்ச்சியின் வாயிலாக மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்கள் வருமாறு:
தலைவர் – முதல்வர், இப்போது ‘அப்பா’ என்று அழைக்கிறார்களே?
கட்சிக்காரர்கள் இயக்கத்திற்குத் தலைவரானதால், “தலைவர்” என்று அழைக்கிறார்கள். முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதனால், “முதல்வர்” என்றும் அழைக்கிறார்கள்.
இப்போது இருக்கும் இளைய தலைமுறை என்னை “அப்பா” என்று அழைப்பதைக் கேட்கும்போதே மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. காலப்போக்கில் மற்ற பொறுப்பில் எல்லாம் வேறுயாராவது வருவார்கள். ஆனால், இந்த “அப்பா” என்ற உறவுமாறாது. அந்தச் சொல், என்னுடைய பொறுப்புகளை இன்னும் கூட்டியிருக்கிறது என்று சொல்வேன். நான் இன்னும் தமிழ்நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது என்று எனக்கு உணர்த்துகிறது!
சோஷியல் மீடியா எல்லாம் பார்ப்பீர்களா?
ஓய்வு நேரங்களில் பார்ப்பதுண்டு, செய்திகளைவிட மக்களின்‘கமென்ட்ஸ்’ என்ன என்று பார்ப்பேன், தீயவற்றை விலக்கிவிட்டு நல்லதை எடுத்துக் கொள்வேன். யாராவது கோரிக்கை வைத்திருந்தால், அது நியாயமான கோரிக்கையாக இருந்தால்அதைத் தீர்த்து வைக்கச் சொல்லி சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பி வைப்பேன்.
பொதுவாக, சோஷியல் மீடியாக்களில் நிறைய உணவுசம்பந்தப்பட்ட வீடியோக்கள் வருகின்றன, நிறைய பேர்ஹோட்டல்களுக்குச் சென்று, ‘ஃபுட் ரிவ்யூ’ போடுகிறார்கள். இளம் தலைமுறையினர், ஃபுட்-க்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்றே ஃபிட்னசுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்!

வெளி மாவட்டப் பயணங்களுக்குச் செல்லும்போது கிடைக்கும் அனுபவங்களைப் பற்றி சொல்ல முடியுமா?
அரசு நிகழ்ச்சிகளிலும் – கழக நிகழ்ச்சிகளிலும் மட்டும் கலந்துகொண்டோமா என்று இந்தப் பயணங்கள் இல்லை. எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும், அந்தப் பகுதியில் இருக்கும்பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள் என்று அனைவரையும்சந்தித்துப் பேசுகிறேன். என்னைச் சந்திக்கும்போது, மக்களின்முகத்தில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் பார்க்கிறேன்.
ஒவ்வொருவரும் என்னிடம் உரிமையோடு பேசுகிறார்கள்.“மக்களுக்கான அரசாக உங்கள் அரசு இருக்கிறது” என்று சொல்கிறார்கள். நம்முடைய குறைகள் தீர்க்கப்படும் என்றுநம்பிக்கையுடன் மனுக்களைக் கொடுக்கிறார்கள். கூடுமானவரைக்கும் அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காண்கிறோம். அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை என்றால், ஏன் அதைசெய்ய முடியவில்லை என்றும் அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். அதேபோன்று அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளையும் – தேவைகளையும் செய்து கொடுக்கிறோம். மொத்தத்தில், இந்த வெளி மாவட்டப் பயணங்கள் எனக்கு மனநிறைவாக இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், புதிய எனர்ஜியைத் தருகிறது!
கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை எவ்வாறு பார்க்கிறீர்கள்? முரண்கள் இருக்கிறதா?
கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை நான் ஆலோசனையாகத்தான் பார்க்கிறேன். முரண்பாடாக நினைப்பதில்லை. ஒரு குடும்பத்தில், பணிபுரியும் அலுவலகத்தில், அனைத்து இடத்திலும் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். கருத்து சொல்வது, ஜனநாயகப்பூர்வமான உறவின் அடையாளம்தான்.
2019-இல் இருந்து ஒன்றாகச் சேர்ந்து தேர்தல் களத்தைச்சந்தித்துக் கொண்டு வருகிறோம். பாஜக-வை எதிர்த்து வெற்றி பெறுவதில், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருப்பது திமுக தலைமையிலான கூட்டணிதான். கருத்து முரண்பாடுகளால் எங்கள் நட்புறவில் எந்தப் பாதிப்பும் இல்லை.
டெல்லி முடிவுகள் இந்தியா கூட்டணிக்குச் சம்மட்டி அடி என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சொல்லியிருக்கிறாரே?
நான் ஏற்கனவே சொன்னதுதான். பழனிசாமி அவர்களின் அறிக்கைகளைப் பார்த்தால், பா.ஜ.க.வின் அறிக்கைகள் போன்றுதான் இருக்கும். அவருடைய குரலே, பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்தான்! நாம் “கள்ளக் கூட்டணி” என்று சொல்வதை நிரூபிக்கிறார் பழனிசாமி. அவ்வளவுதான்! இதையெல்லாம்பேசுவதற்கு முன், அவர் தன்னுடைய தோல்விகளைப் பற்றியோசித்துப் பார்க்க வேண்டும்!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான நிறைய செய்திகள் இப்போது வருகிறதே?
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நாம் உடனடியாகநடவடிக்கை எடுக்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும்கைது செய்கிறோம். பாலியல் குற்றங்களுக்கு இன்னும் கடுமையான தண்டனைகள் வழங்குவதற்குச் சட்டமன்றத்தில் நானே சட்டம்கொண்டு வந்திருக்கிறேன். சிறப்பு நீதிமன்றங்கள் கொண்டு வந்திருக்கிறோம்; விரைவாக தண்டனை வாங்கிக் கொடுக்கிறோம்.
பாலியல் குற்றங்கள் செய்பவர்கள், அவர்கள் வீட்டில்இப்படியொரு குற்றம் நடந்தால் எப்படி எதிர்கொள்வார்கள் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.