Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழக பட்ஜெட்: பள்ளிக் கல்வி, உயர் கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள்…

மிழக சட்டசபையில் இன்று 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

அவர் தனது பட்ஜெட் உரையில், பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளுக்காக வெளியிட்ட 10 முக்கிய அறிவிப்புகள் இங்கே…

பள்ளிக் கல்வி

பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மேலும் 3.14 லட்சம் மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படும. ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு.

பேராசிரியர் அன்பழகன் திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

2000 பள்ளிகளில் ரூ.160 கோடியில் கணினி ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும். 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.56 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

2676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ரூ.65 கோடியில் அமைக்கப்படும்.

1721 முதுகலை ஆசிரியர்களும், 841 பட்டதாரி ஆசிரியர்களும் நேரடி நியமணம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள்.

நான் முதல்வன் – கல்லூரிக் கனவு திட்டத்தின மூலம் 2000 அரசுப் பள்ளி மாணவர்கள் அகில இந்திய அளவில் உள்ள புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படுவார்கள். ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.

ஈரோடு – சத்தியமங்கலம் – தாளவாடி, தருமபுரி – பாப்பிரெட்டிப்பட்டி, கள்ளக்குறிச்சி – சின்னசேலம், கல்வராயன் மலை, கிருஷ்ணகிரி – தளி, நீலகிரி – கோத்தகிரி, திருவண்ணாமலை – ஜவ்வாதுமலை ஆகிய தொலைதூர மலைப் பகுதிகளில் உள்ள 14 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.

சேலம், கடலூர், திருநெல்வேலி மாவட்டத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகங்கள் அமைக்கப்படும்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.3676 கோடி நிதி ஒதுக்கீடு.

உயர் கல்வித் துறை

உயர் கல்வித் துறைக்கு ரூ.8,494 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அரசுப் பல்கலைக்கழகங்களின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் வண்ணம், தொகுப்பு நிதி நல்கை ரூ.700 கோடி உயர்த்தி வழங்கப்படும்.

அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்கம் ரூ.50 கோடியில் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்படும்.

திறன்மிகு உற்பத்தி, இணையப் பாதுகாப்பு, உணவுத் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பம், ஆளில்லா வான்கலம் வடிவமைப்பு ஆகிய துறைகளில் புதிய பட்டயப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.

பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.

7.5% உள் ஒதுக்கீட்டில் உயர்கல்வி படித்து வரும் 41,038 மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கும். ரூ.550 கோடி நிதி ஒதுக்கீடு.

சென்னை அறிவியல் மையம் ரூ.100 கோடியில் உருவாக்கப்படும்.

சென்னை மற்றும் கோவையில் அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சி மையங்கள் ரூ.100 கோடியில் உருவாக்கப்படும்.

ஒன்றிய அரசின் குடிமைப் பணி தேர்வில், முதன்மை தேர்வில் பெற்றி பெற்று நேர்முகத் தேர்விற்குத் தயாராகும் இளைஞர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயின்றிட உதவித்தொகை அளிக்கும் வகையில் ரூ.10 கோடி நிதி வழங்கப்படும்.

Exit mobile version