பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றங்கள்… முதல்வரின் 4 முக்கிய அறிவிப்புகள்!

மிழக சட்டப் பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும், என்பது உள்ளிட்ட 4 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புற பகுதிகளில் ஏழு தனிச் சிறப்பு நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்படும். இத்தகைய குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க, மாவட்டந்தோறும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில சிறப்புக் குழு அமைக்கப்படும். பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்று, சிறையில் இருக்கின்ற கைதிகளுக்கு, முன்விடுதலை கிடைக்காதவகையில் தமிழ்நாடு சிறைத் துறை விதிகள் திருத்தம் செய்யப்படும்.

மாநிலத்தின் நகர்ப்புர உள்ளாட்சி, உள்ளாட்சி அமைப்புகளை ஒட்டியுள்ள கிராமங்களும் மிக விரைவாக வளர்ச்சி அடைந்து வருவதால் பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி அமைப்புகளின் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உதயமாகி இருக்கின்றன. இந்த நகரங்களில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும்வகையில் இந்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலுள்ள சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் புதிய சாலைகளை அமைத்திடவும், பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைத்து புதுப்பித்திடவும், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைகளால் சேதப்பட்டுள்ள சாலைகளை சீரமைத்திடவும் வரும் ஆண்டுகளில் 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புர சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்.

பல்வேறு கோரிக்கைகளை ஏற்று மக்களுக்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்த வரும் ஆண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டு வரப்படும்” என அறிவித்தார்.

ஸ்டாலின் பட்டியலிட்ட அரசின் சாதனைகள்…

தொடர்ந்து தமது அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ” தமிழ்நாடு இந்திய நாட்டின் இரண்டாவது வளர்ந்த பொருளாதார மாநிலமாக இருக்கிறது.

தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 விழுக்காடாக இருந்த தமிழ்நாட்டின் பங்கு, கடந்த நான்கு ஆண்டுகளில் 9.21 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. பொருளாதார குறியீடுகள் அனைத்திலும் தமிழ்நாடு வளர்ச்சியை எட்டியிருக்கிறது.வறுமைக் குறியீடுகளில் இந்தியாவின் சராசரி விழுக்காடு என்பது 14.96-ஆக இருக்கும்போது தமிழ்நாட்டின் சராசரி 2.2 விழுக்காடாக இருக்கிறது.

பட்டினிச் சாவு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றிருக்கிறது.இந்திய நாட்டின் மொத்த பெண் தொழில் பணியாளர்களில் 41 விழுக்காடு பெண்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றார்கள்.கடந்த மூன்று ஆண்டுகளில் 10 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான தனியார் முதலீட்டுத் திட்டங்கள் வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.இந்தியாவிலேயே தொழில் நிறுவனங்கள் பெருகியதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

» kış saatine neden alışamıyoruz ?. Tägliche yachten und boote. hest blå tunge.