ராணிப்பேட்டையில் டாடா கார் தொழிற்சாலை… 20,000 பேருக்கு வேலை!

தமிழ்நாடு உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குவதோடு, அதிக தொழிற்சாலைகளுடன் இந்திய அளவில் முன்னணி மாநிலமாகவும் விளங்குகிறது.

அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கடந்த மார்ச் 13 ஆம் தேதி அன்று, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 5 ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் தமிழக அரசுக்கும் இடையே கையெழுத்தானது.

ஒப்பந்தம் கையெழுத்தான போது…

செப்டம்பர் 28 ல் அடிக்கல்

இந்த சூழலில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைய இருப்பதாகக் கூறப்பட்டது. தற்போது, முதலமைச்சர் அடிக்கல் நாட்டும் தேதி தொழில்துறை அலுவலர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டையில் அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

இதனால் நேரடியாக 5,000 நபர்களுக்கும் மறைமுகமாக சுமார் 15,000 பேருக்கும் என மொத்தம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது. இதை தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மெகா காலணி உற்பத்தி பூங்கா

இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறந்து விளங்கும் தோல் மற்றும் காலணி உற்பத்தியை சர்வதேச தரத்தில் உயர்த்தி பனப்பாக்கத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் மதிப்பில் மெகா காலணி உற்பத்தி பூங்கா அமையவுள்ளது. அதற்கும் அன்றைய தினமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

25,000 பேருக்கு வேலைவாய்ப்பு

புதிய தொழிற்சாலையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து படிப்படியாக உற்பத்தியை பெருக்க நிறுவனம் திட்டங்களை வகுத்துள்ளன. கூடுதலாக, ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் கட்டப்படும் தொழிற்சாலையில், பிரீமியம் மின்சார கார்களையும் நிறுவனம் தயாரிக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இரண்டு புதிய ஆலைகள் மூலம் மொத்தம் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கப்படும் புதிய டாடாவின் தொழிற்சாலையால், அங்குள்ள மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்பெறுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

En direct guerre au proche orient : après la mort de 4 soldats israeliens, …. Fsa57 pack stihl. Quantité de cheminée à granules eva calor michelangelo 10 kw.