தமிழ் நிலம் App: இனி போனிலேயே உங்கள் நிலங்கள் விவரத்தை அறியலாம்!

நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் (Common Service Centres) மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து, அவை இணையவழியில் பரிசீலிக்கப்பட்டு, பட்டாமாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் பட்டா மாறுதல் கோரி https://tamilnilam.tn.gov.in /citizen/ என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தமிழக சட்டமன்றத்தில் கடந்த 2023-24 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை விவாதத்தின்போது, “இடம் சார்ந்த நில ஆவணங்களின் விவரங்களை அறிவதற்கு புதிய செயலி உருவாக்கப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்களது நிலத்திற்கு உண்டான நில அளவை மற்றும் புவிசார் விவரங்களை கைபேசியில் அறியும் வகையில் தமிழ் நிலம் புவிசார் தகவல் (TamilNilam Geo-Info) என்னும் கைபேசி செயலியை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்கள் நிலத்தினை வரைபடத்தில் தேர்வு செய்தவுடன், அந்த நிலத்திற்கு உண்டான நில அளவை எண் பரப்பு மற்றும் நில அளவை உரிமையாளர் போன்ற விவரங்களுடன் புவிசார் தகவலை தங்களது கைபேசி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதன் மூலம் நில அளவை எண் புல வரைபடம், பட்டா எண் அல்லது பதிவேடு மற்றும் சிட்டா போன்ற விவரங்களை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலையாமல், இந்த செயலி மூலமாகவே எளிதாக அறிந்து கொள்ள முடியும். இதனால், பொதுமக்களுக்கான வீண் அலைச்சல், கால விரயம் மற்றும் பணச் செலவு போன்றவை தவிர்க்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “எந்த ஒரு பணியாக இருந்தாலும், தாலுகா அலுவலகத்திற்கு வந்தால்தான் பணி நடக்கும் என்ற சூழ்நிலை இருந்தது. இனி தங்கள் வீட்டில் இருந்தே தங்கள் நிலங்களின் விவரங்களை கைப்பசி மூலமாகவே அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளும் வகையில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நிலம் குறித்த பிரச்சினைகள்தான் நமக்கு ஏற்பட்டு வந்தது. நில அளவைத் துறை வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது இன்னும் வேகமாக முன்னேற வேண்டும் நிறைய பட்டாக்கள் வழங்க வேண்டும். மக்களுக்கு நிறைவான சேவை செய்ய வேண்டும். மக்களுக்கு சேவை செய்கின்ற நேரத்தில் அவர்களை தொந்தரவு செய்யாமல் அலைக்கழிக்காமல் அவர்களது வேலையை செய்து கொடுக்க துணையாக இந்த துறை இருக்க வேண்டும்” என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பணியாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bilim politikaları İnsan ve kainat. Özel yat kiralama. Her er, hvad du kan gøre for at sikre, at din hests tænder forbliver sunde :.