விருதுநகர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட சூதுபவள கல்!

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடந்தாண்டு நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வில், கழிவுநீர் வாய்க்கால் போன்ற செங்கல்தளம், வட்ட வடிவ செங்கல் கட்டுமானம் போன்றவை கண்டறியப்பட்டன. மேலும், தங்க மூக்குத்தி, எலும்பு முனைக்கருவிகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட தொல்பொருள்களும் கிடைத்தன. இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் 18 ஆம் தேதி இரண்டாம் கட்டட அகழாய்வை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து 4 செம்பு ஆணிகளும், ஒரு அஞ்சனக்கோலும் கிடைத்தது. மேலும், கண்ணாடி மணிகள், பச்சைக் கல் மணிகள், கிரிஸ்டல் மணிகள், அக்கேட் (Agate), சூது பவளம் (Carnelian), செவ்வந்திக்கல் (Amethyst) என ஜூலை 23 வரை 470 கண்ணாடி மணிகள் கிடைத்தன. இதில், இரண்டு சூது பவள மணிகள் (நீளம் -0.7 செ.மீ, விட்டட் ம்- 1.1 செ.மீ, எடை 0.77 கிராம்), (நீளம்- 0.7 செ.மீ, விட்டட் ம்- 0.3 செ.மீ, எடை – 0.22 கிராம்) கண்டெடுக்கப்பட்டன.

விஜய கரிசல்குளத்தில் சூதுபவள மணி

அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம், விஜய கரிசல்குளத்தில், மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரை உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், பெண்ணின் தலைப்பகுதி என, 1,500 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில், தற்போது காளையின் உருவம் செதுக்கப்பட்ட சூதுபவள மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், “விஜய கரிசல்குளம் அகழாய்வில் கார்னீலியன் என்றழைக்கப்படும் சூதுபவள கல்மணியில், குழிவான முறையில் செதுக்கப்பட்ட திமிலுள்ள காளை கண்டறியப்பட்டுள்ளது. இது, மோதிரத்தில் பதிக்கும் வகையில் உள்ளது. செதுக்கு முறையில், சீறும் திமிலுள்ள காளை உருவம் கிடைக்கப் பெற்றுள்ளது இதுவே முதல் முறை.

இதுவரையில் சுடுமண்ணால் ஆன திமில் உள்ள காளைகள் கிடைத்த நிலையில், தற்போது சூதுபவள கல்லில் திமிலுள்ள காளை உருவம் பொறிக்கப்பட்டது கிடைத்திருப்பது சிறப்பு.கீழடி, சேரர் துறைமுக நகரமான முசிறி பட்டணம் அகழாய்வுகளில் சூதுபவள கல்மணியில் விலங்கின உருவம் பொறிக்கப்பட்ட பதக்கங்கள் கிடைத்துள்ளன” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dprd kota batam. Quiet on set episode 5 sneak peek. Ultimate guide : how to change your app recommendation settings in windows 11 and windows 10.