முதலுதவி: தமிழக மலைப் பகுதிகளுக்கு வரப்போகும் பைக் ஆம்புலன்ஸ்!

மிழகத்தில் பல்வேறு மலை கிராமப் பகுதிகள், எளிதில் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து வசதியற்றதாக உள்ளன. இதனால், இத்தகைய மலை கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்கள், குறிப்பாக மகப்பேறு காலங்களில், அவசர சிகிச்சை தேவைப்பட்டால் அதை பெறுவது கடினமாக உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, பழங்குடியின மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் ‘பைக் ஆம்புலன்ஸ்’ எனப்படும், அவசர கால இருசக்கர மருத்துவ வாகனங்களை பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், முதல்கட்டமாக 25 அவசர கால இருசக்கர மருத்துவ வாகனங்களை, ரூ.1.60 கோடி செலவில் வாங்க உள்ளது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாகனங்கள் 108 அவசரகால ஊர்திகளுக்கு இணைப்பு வாகனங்களாக (Feeder Ambulance) செயல்பட்டு, நோயாளிகளை மருத்துவமனைக்கு துரிதமாக அழைத்துச் செல்ல வழிவகுக்கும். இதனால், போக்குவரத்து வசதி இல்லாத மலைப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு குறித்த நேரத்தில் உரிய மருத்துவ சேவை கிடைப்பதை இந்த இரு சக்கர அவசரகால வாகன சேவை உறுதி செய்யும்.

நவீன முறையில் உரிய மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட இரு சக்கர அவசரகால வாகன சேவையானது, தற்போதுள்ள 1353 அவசரகால 108 ஊர்தி சேவையினுள் அடங்கும். இந்த இரு சக்கர அவசரகால வாகனங்களின் சேவை, கடைநிலை பயனாளர் வரை சென்றடையும். இந்த வாகனமானது உடனடி மருத்துவ சிகிச்சை அளித்து, பயனாளிகளை மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும்.

சேவையின் சிறப்பம்சங்கள்

மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு, மகப்பேறு, பாதுகாப்பான பிரசவ போக்குவரத்து மற்றும் தாய்சேய்நல மருத்துவ பரிசோதனைகளுக்கான சேவை. மருத்துவ மற்றும் எதிர்பாராத அவசரநிலைகளில் உதவுவதற்கு ஏற்றவாறு இவ்வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதியற்ற பகுதிகளில் உள்ள பயனாளிகளை உரிய 108 அவசர கால வாகனங்கள் உள்ள இடங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான இணைப்பு வாகனமாக இவ்வாகனங்கள் செயல்படும்.

எளிதில் அணுக முடியாத, 10 மாவட்டங்களில் உள்ள மலைக் கிராமங்களை தேர்ந்தெடுத்து, அங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கும் மற்றும் இதர மக்களுக்கும் இந்த இருசக்கர முதலுதவி வாகனங்கள் உடனடி சேவை செய்யும். இந்த இருசக்கர அவசரகால வாகனத்தில் ஜிபிஎஸ் (GPS) கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Muhammad rudi, kepala bp batam. Lizzo extends first look deal with prime video tv grapevine. Rob gronkowski rips patriots’ decision to fire jerod mayo after 1 season.