Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

ஏப்ரலில் தொடங்கும் பள்ளித் தேர்வுகள்… 1 – 9 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை

மிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, கடந்த மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்ததாக 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 28 முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி ஆண்டு தேர்வினை எழுத வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தொடக்கக் கல்வித் துறையில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 9 முதல் தேர்வு தொடங்குகிறது. ஒன்றாம் முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது. ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 21 வரை முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளது.

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 8 முதல் 24 ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஜூன் 2 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு அட்டவணை விவரம்

ஏப்ரல் 9ம் தேதி 4,5 ஆம் வகுப்புகளுக்கு தமிழ்பாடத் தேர்வு, 11 ஆம் தேதி ஆங்கிலம், 15 ஆம் தேதி 1,2 மற்றும் 3 ஆம் வகுப்புகளுக்கு தமிழ்பாடத் தேர்வும், 4, 5 ஆம் வகுப்புகளுக்கு கணக்கு பாடத் தேர்வும், 16 ஆம் தேதி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை விருப்ப மொழிப் பாடத் தேர்வும், 17 ஆம் தேதி 1,3 ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், 4,5 ஆம் வகுப்புகளுக்கு அறிவியல், 21 ஆம் தேதி 1,2,3 ஆம் வகுப்புகளுக்கு கணக்கு, 4, 5 ஆம் வகுப்புகளுக்கு சமூக அறிவியல், தேர்வுகள் நடக்கின்றன.

இதையடுத்து, 6,7,8,மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 8ம் தேதி தமிழ்ப்பாடத் தேர்வு, 9 ஆம் தேதி ஆங்கிலம், 16 ஆம் தேதி கணக்கு, 17 ஆம் தேி விருப்ப மொழி, 21 ஆம் தேதி அறிவியல், 22 ஆம் தேதி விளையாட்டு, 23 ஆம் தேதி 6,7 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் சமூக அறிவியல், 24 ஆம் தேதி 8,9 ஆம் வகுப்புக்கு சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடக்கின்றன.

இதில் 1, 2 மற்றும் 3 ஆம் வகுப்புகளுக்கு காலை10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது. அதேபோன்று 6, 7 ஆம் வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் தேர்வு நடக்கும். 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வான சமூக அறிவியல் தேர்வு மட்டும் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version