தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் உருவான 30,324 தொழில் முனைவோர்கள்… 16 தொழிற்பேட்டைகள்!

டந்த ஜனவரி மாதம் முதல்வர் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் எம்எஸ்எம்இ எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில், 5068 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. கடந்த 8 மாதங்களில் இதுவரை 1,645 நிறுவனங்கள் மட்டுமே உற்பத்தியை தொடங்கி இருக்கிறது.

மீதம் இருக்கக்கூடிய தொழில் தொடங்காத, வங்கி கடன் பெற்ற தொழில் முனைவோர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து, அதற்கான தீர்வை ஏற்படுத்துவதற்காக அவர்களுடனான கலந்தாய்வு கூட்டத்துக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்தது. கோவை கொடிசியா அரங்கில் இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில், அனைத்து துறை அதிகாரிகளும் இங்கே அழைக்கப்பட்டனர்.

இதில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அப்போது 8 மாத காலமாக தொழில் தொடங்காததற்கான காரணம், அதற்கான நடைமுறை சிக்கல்களை களைந்து, விரைவில் தொழில் தொடங்க ஆவண செய்யப்படும் என உறுதி அளித்தார்.

இதனை பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், “கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில், இதுவரை ரூ.2,615 கோடியே 30 லட்சம் தொழில் தொடங்குவதற்காக வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. 30,324 தொழில் முனைவோர்களை கடந்த மூன்று ஆண்டு காலத்தில் அரசு உருவாக்கி, 3 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை தமிழக முழுவதும் 16 தொழிற்பேட்டைகள், 415 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. புதிதாக 115.6 கோடி மதிப்பில் பத்து தொழிற்பேட்டைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் சமச்சீரான தொழிற் வளர்ச்சி ஏற்படுத்தி, அதிக தொழில் வளர்ச்சியை உருவாக்கி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற இலக்கில் தமிழக அரசு செயல் பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் மின்சார கட்டணம் குறைவு. கடந்த அதிமுக ஆட்சியாளர்கள், ஒன்றிய அரசின் உதய் திட்டத்தில் கையெழுத்து போட்டதால் தான், மின் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டதற்கு காரணம்.

கடன் வழங்க தட்டிக் கழித்தால் வங்கிகள் மீது நடவடிக்கை

தொடர்ந்து ஒரு சிலருக்கு தொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம் வங்கிகள் கடன் கொடுக்க உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தாலும் கடன் கொடுக்க மறுப்பது குறித்த கேள்விக்கு, “மாவட்ட வாரியாக ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் குறைகளை கேட்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.

தொழில் தொடங்குவதற்கான கடன் வழங்குவதை வங்கிகள் தட்டிக் கழிப்பதாக புகார் தெரிவித்தால், முதல்வர் தனி பிரிவிலிருந்து இயங்கும் துறை உடனடி நடவடிக்கை எடுக்கும்” என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

台中健身房推薦 冥想、瑜珈 | [your brand]. Dancing with the stars queen night recap for 11/1/2021. 인기 있는 프리랜서 분야.