தமிழகத்தில் வெப்ப நிலை திடீர் அதிகரிப்பு… காரணம் என்ன?

தமிழ்நாட்டில் குளிர்காலம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள போதிலும், பல இடங்களிலும் இன்னும் குளிர்காலம் போல கடும் குளிர் நிலவுகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காலையிலும் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. சில இடங்களில் காலை நேரங்களிலும் குளிர்ச்சியான நிலையே காணப்படுகிறது.
அதே சமயம், கோடை காலம் தொடங்க இன்னும் ஓரிரு மாதங்கள் உள்ளபோதிலும், சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் பகல் நேரத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கிறது.
நேற்றைய நிலவரப்படி கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 35.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. சென்னை மற்றும் மாநிலத்தின் சில பகுதிகளில் பகல்நேர வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
” நகரின் மையப்பகுதிகளில் வடகிழக்கு காற்று கூறுகள் இல்லாதது மற்றும் நகர்ப்புற வெப்பத்தின் தாக்கம் ஆகியவை கடந்த 6 ஆண்டுகளில் இயல்பான அல்லது குறைந்த வெப்பநிலைக்கு காரணங்களாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் இரவு வெப்பநிலை இயல்பை நெருங்கி அல்லது 20 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்ததால், வெப்பமான குளிர்காலம் நிலவுகிறது” என்கிறார்கள் வானிலை நிபுணர்கள்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக சராசரியை விட அதிகமான இரவு வெப்பநிலை நிலவுகிறது. கடந்த ஆண்டு, பிப்ரவரி 8 மற்றும் 12 ஆம் தேதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. கடந்த பத்தாண்டுகளில், பிப்ரவரி 2, 2018 அன்று மட்டுமே இரவு வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது.
வடக்குக் காற்று இல்லாததும், நகரின் மையப் பகுதிகளில் நகர்ப்புற வெப்பத் தீவின் தாக்கமும் கடந்த ஆறு ஆண்டுகளில் இயல்பான குறைந்தபட்ச வெப்பநிலையை நெருங்குவதற்கு சில காரணங்களாக உள்ளது.. 2011 மற்றும் 2014 க்கு இடையில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக சென்னை நகரின் இரவு வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகவே இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை பிப்ரவரி 13, 2011 அன்று 17.7 டிகிரி செல்சியஸாகக் குறைந்ததாக வானிலை நிபுணர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.