தமிழகத்திற்கான கோடைகால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு… முழு விவரம்!

தமிழ்நாட்டில் தற்போது பிளஸ் 2, பிளஸ் 1 தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மார்ச் 25 ஆம் தேதியுடன் பிளச் 2 தேர்வுகள் முடிவடைய உள்ளது. அதனைத் தொடர்ந்து 10 ஆம் வகுப்புத் தேர்வுகளும் முடிவடைந்து கோடை விடுமுறை தொடங்கிவிடும்.
இதனால், ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்லும் போது கூடுதல் நெரிசல்களை தவிர்க்கும் விதமாக தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
அதன்படி தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு சிறப்பு அதிவேக ரயில்கள் இயக்கப்பட உள்ளது. ஏப்ரல் 4 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 27 ஆம் தேதி வரை உள்ள நாட்களில் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
ஏப்ரல் 4 ஆம் தேதி திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு அதிவேக ரயிலானது, மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.மறுமார்க்கத்தில் ஏப்ரல் 4 ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 4 ஆம் தேதிகளில் இருந்து ஏப்ரல் 27 ஆம் தேதி வரை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் ரயில்கள் இதே நேரத்தில் புறப்பட்டுச் செல்லும்.
திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருத்துவர், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை 8 மணிக்கு இந்த சிறப்பு அதிவேக ரயில்கான முன்பதிவு தொடங்க உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.