மாநிலங்களவை எம்.பி. பதவி… முட்டி மோதும் அதிமுக சீனியர்கள்… எடப்பாடி பட்டியலில் யார்?

மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்.பி-க்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவை எம்.பி தேர்தலில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவின் மூத்த வழக்கறிஞர் வில்சன், தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ஆகியோர் திமுக ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டனர்.

மாநிலங்களவைக்கு ஒரு உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில், 134 எம்.எல்.ஏக்களை கொண்ட திமுகவுக்கு 4 இடங்களும், 66 எம்.எல்.ஏக்களை வைத்து உள்ள அதிமுக-வுக்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததற்கு கைமாறாக, திமுக சார்பில் ஒரு சீட் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட உள்ளது.

முட்டி மோதும் அதிமுக சீனியர்கள்…

தேமுதிக தரப்பில் தங்களுக்கு ஒரு இடம் தரப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 2024 தேர்தலின்போது அப்படி எதுவும் உடன்படிக்கை செய்துகொள்ளப்படவில்லை என கூறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

இந்த நிலையில், அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் 2 எம்.பி.-க்களுக்கான பதவியைப் பெற அதிமுகவின் மூத்த தலைவர்களிடையே தீவிரமான போட்டி எழுந்துள்ளது. குறைந்தது 10 மூத்த தலைவர்களாவது முட்டி மோதுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் மகன் உசேன், விந்தியா, செம்மலை, ஜெயக்குமார் (அல்லது அவரது மகன் ஜெயவர்தன்), கோகுல இந்திரா மற்றும் வைகைசெல்வன் ஆகியோர் போட்டியில் முன்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஜெயகுமார் எப்படியேனும் தனக்கு அல்லது தனது மகன் ஜெயவர்தனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற கடுமையாக முயற்சித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

எடப்பாடி பட்டியலில் யார்?

இந்த நிலையில், சிறுபான்மை சமூகத்தை திருப்திப்படுத்த, கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு இடத்தை முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு, குறிப்பாக அதிமுக அவைத் தலைவரான தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு ஒதுக்க ஆர்வமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், இன்னொரு இடத்திற்காக பிற மூத்த தலைவர்களிடையே கடுமையான போட்டி நடந்து வருகிறது.

எடப்பாடியே விரும்புவதால், தமிழ்மகன் உசேனுக்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது. அவரை மாநிலங்களவைக்கு அனுப்புவது சிறுபான்மை சமூகத்தை திருப்திப்படுத்த உதவும் என எடப்பாடி கணக்குப் போடுகிறார். ஏனெனில், 60 முதல் 80 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் இஸ்லாமியர்களின் பங்கு முக்கியமானதாக உள்ளது. அதே சமயம், தற்போது பதவிக்காலம் முடிவடைய உள்ள அதிமுகவின் சந்திரசேகரனுக்கே மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கலாமா என்று எடப்பாடி யோசிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்புமணிக்கு கேட்கும் பாமக

அதிமுக தரப்பில் 2 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டுமானால், அதற்கு பாமக மற்றும் பாஜக உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதிமுகவில் 65 எம்எல்ஏக்கள் உள்ளனர். எடப்பாடி முகாமில் 61 எம்எல்ஏக்கள் உள்ளனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 4 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணிக்கான ஒரு நல்லெண்ண அடிப்படையில் அதிமுக ஒரு இடத்தை அன்புமணி ராமதாஸுக்கு ஒதுக்க வேண்டும் என்று பாமக தரப்பிலும் எடப்பாடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அதிமுக-வுக்குள்ளேஎயே போட்டி அதிகமாக காணப்படுவதால் பழனிசாமி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது குறித்து இன்னும் எதுவும் உறுதியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Here’s what we know about the death of hamas leader yahya sinwar and his final moments –. Dinner menu wedding valaikappu engagement caterer & catering service in madurai. Global tributes pour in for pope francis.