மழைக்கால நோய்களும் தடுக்கும் வழிமுறைகளும்…

மிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடையத் தொடடங்கிவிட்டது. அநேகமாக டிசம்பர் வரை மழையின் தாக்கம் இருக்கலாம். இந்த நிலையில், வீட்டைச் சுற்றி நிற்கும் மழை நீர், குளிர்ச்சியான சுற்றுப்புறச் ​​சூழல், காற்றில் நிலவும் ஈரப்பதம் போன்ற காரணங்களால், நோய்களை உருவாக்கும் பல வைரஸ்கள், பாக்டீரியாக்களின் பெருக்கம் மற்ற பருவங்களைக் காட்டிலும் இரட்டிப்பாகும்.

இத்தகைய சூழ்நிலையில், மழைக்காலத்தில் எத்தகைய நோய் தாக்குதல் ஏற்படும் என்பது குறித்தும், அதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது குறித்தும் மருத்துவர்கள் தெரிவிக்கும் சில அடிப்படை சுகாதார நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் இங்கே…

சளி, இருமல்

காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதாலும், குளிர்ச்சியான சூழ்நிலையாலும் சிலர் சளி மற்றும் இருமல் பிரச்னைகளால் அவதிப்படுவார்கள். இன்ஃப்ளூயன்சா வைரஸ் காரணமாகவும் சளி இருமல் வரும். இந்தப் பிரச்னைகள் வராமல் இருக்க, வெளி இடங்களில் சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி ஆவி பிடிப்பது, மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் இந்த பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.

வயிற்றுப்போக்கு

மழைக்காலத்தில் தண்ணீரில் கழிவுநீர் கலக்க வாய்ப்பு அதிகம். இதனால், காலரா போன்ற வயிற்றுப் போக்கைப் பரப்பும் கிருமிகள் இந்தப் பருவத்தில் வேகமாகப் பரவும். சுகாதாரம் அற்ற முறையில் தயாரித்து விற்கப்படும் உணவுப் பொருட்களை உண்பதன் மூலமும், ஈ மொய்த்த பொருட்களைச் சாப்பிடுவதன் மூலமும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு இந்தப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தெருவோர உணவுகள் மட்டும் இன்றி வீட்டிலும் சுத்தமான உணவு, காய்ச்சி வடிகட்டிய சுத்தமான நீரைப் பருகவில்லை எனில், டைபாய்டு காய்ச்சல் வரலாம்.

மலேரியா / டெங்கு

மழைக்காலத்தில், எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்திக்கு உதவுகின்றன. இதில், முக்கியமானது மலேரியா காய்ச்சலை உருவாக்கும் ‘அனோபீலஸ்’ என்ற பெண் கொசு. இந்தக் கொசு ஒருவரைக் கடித்து, மற்றொருவரைக் கடிக்கும்போது, அதன் எச்சில் வழியாக கிருமிகள் பரவி, மலேரியா காய்ச்சல் ஏற்படுகிறது.

மலேரியாவுக்கு அடுத்தபடியாக நாட்டையே பயமுறுத்தும் கொசு, டெங்குவைப் பரப்பும் ‘ஏடிஸ் எஜிப்டி’. இந்தக் கொசு, அசுத்தமான நீர் நிலைகளில் வாழாது. எனவே, சாக்கடைகளில் இந்தக் கொசு உற்பத்தி ஆவது இல்லை. வீட்டைச் சுற்றி இருக்கும் தேங்காய்ச் சரடுகள், ஓடுகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றில் தேங்கும் மழைத் தண்ணீரில் இருந்துதான் இந்தக் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டாலே, டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க முடியும்.

நுரையீரல் தொந்தரவுகள்

மழைக்காலங்களில் உலர்ந்த மற்றும் குளிர்ந்த காற்றை மாறி மாறி சுவாசிப்பதால் தொண்டைக் கரகரப்பு வரலாம், நெஞ்சுச்சளி கட்டிக்கொள்ளும். ஆஸ்துமா, நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுவிட மிகவும் சிரமமாக இருக்கும். நெற்றி மற்றும் கன்னங்களில் இருக்கும் சைனஸ் அறைகள், தொற்று காரணமாக பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். இதனால், சைனஸ் தலைவலி வரலாம்.

காலையில் படுக்கையில் இருந்து எழும்போது, பயங்கரமாக தும்மல் வரும். கன்னங்களில் வலி இருக்கும். நுரையீரலில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைத்தொற்று போன்றவற்றால், நிமோனியா காய்ச்சல் வரலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள், முதியவர்களுக்கு இந்த காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

மழைக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை…

சாப்பிடுவதற்கு முன் பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவவும். குடிப்பதற்கு நன்கு காய்ச்சி ஆறிய தண்ணீரையே பயன்படுத்தவும்.

ப்பொழுதும் உங்களின் உணவை மூடி வைத்திருங்கள் மற்றும் வெளி உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும்.

ங்கள் வீட்டைச் சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றி, எல்லா நேரங்களிலும் போதுமான காற்றோட்டத்தை உறுதி செய்யவும்.

ங்கள் வீட்டில் கொசு வலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் கொசுக்கள் இல்லாத சூழலைப் பராமரிக்கவும். செயற்கை ரசாயனங்கள் கலந்த கொசுவத்தி, கொசுவத்தி திரவம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

ரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள பொது மருத்துவரை அணுக வேண்டும்.

ருத்துவமனைக்குச் சென்று ரத்த பரிசோதனை செய்து, என்ன வகையான காய்ச்சல் என்பதை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். எப்போதும் கையில் ஒரு கைக்குட்டை வைத்திருப்பது அவசியம். தும்மல் வந்தாலோ, சளி வந்தாலோ கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும்.

டிக்கடி ஆவி பிடிக்க வேண்டும். ஆவி பிடிப்பது நுரையீரலுக்கு நல்லது. மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் கல் உப்பு போட்டு, தொண்டையில் படுமாறு வாய்கொப்பளிப்பது தொண்டைப் புண்களை வராமல் தடுக்கும்.

ழைக்காலம் முழுவதும் ஒரே பெட்ஷீட், போர்வையைப் பயன்படுத்தக் கூடாது. 15 நாட்களுக்கு ஒருமுறை துவைத்து பயன்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bahas 2 agenda penting, pjs wali kota batam hadiri rapat paripurna dprd kota batam. Raven revealed on the masked singer tv grapevine. martha stewart said this week it was “very easy” to keep her affair a secret.