Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

காலாண்டு விடுமுறை: 1,100 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

ள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையையொட்டி, சொந்த ஊர்களுக்குச் செல்வோர்களின் வசதிக்காக , 1,100 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட அறிக்கையில், ” செப்.27 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை), 28 ஆம் தேதி (சனிக்கிழமை), 29 ஆம் தேதி (ஞாயிறு) வார விடுமுறை மற்றும் பள்ளிகள் காலாண்டு விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 395 பேருந்துகளும், நாளை மறுநாள் 345 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 70 பேருந்துகளும் நாளை மறுநாள் 70 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ேமலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதாவரத்திலிருந்து நாளை 20 பேருந்துகளும் நாளை மறுநாள் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version