தீவிரமடையும் பருவமழை… தென்மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

மிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் தொடங்கிய போதிலும் இன்னும் தீவிரமடையவில்லை. தீபாவளியையொட்டி பல மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது.

இந்த கடந்த இரு தினங்களாக சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்த நிலையில், நாளை முதல் பருவமழை தீவிரமடைய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 9 ஆம் தேதி வரை 3 நாட்கள் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதியிலும் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும்.செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

8 ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

9 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள், வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் 8 ஆம் தேதி வரை மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

台中健身房推薦 world gym費用、健身工廠費用 | [your brand]. Raven revealed on the masked singer tv grapevine. 자동차 생활 이야기.