தமிழக உயர்கல்வி நிறுவனங்களில் விவரங்கள் அறிய ‘ஹெல்ப் டெஸ்க்’!

மிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள். 52 தொழில்நுட்பக் கல்லூரிகள்/சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டுவருகின்றன.

இந்தக் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பட்டப்படிப்புகள், பட்டமேற்படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள் என்னென்ன மற்றும் மாணவர் சேர்க்கை, துறை அலுவலகங்களின் அமைவிடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களைக் கேட்டு மாணவ, மாணவியர் மட்டுமல்லாது, பெற்றோர் மற்றும் பொதுமக்களும் அங்கு வருகின்றனர்.

அவ்வாறு வருபவர்களுக்கு அவர்கள் கேட்கும் விவரங்கள் தொடர்பாக வெளிப்படையான, பதிலளிக்கக்கூடிய மற்றும் அணுகுவதற்கு எளிமையான ஒரு சூழலை ஏற்படுத்தும் விதமாக, யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும், எந்த அலுவலரை அணுக வேண்டும் என்பது போன்ற விவரங்களைத் தெளிவாக தெரிவிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி உயர்கல்வித் துறையின்கீழ் இருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவ, மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ‘ஹெல்ப் டெஸ்க்’ (Help Desk) எனப்படும் உதவி மையம் அமைக்கப்பட உள்ளது.

அலுவலக நடைமுறைகள், தனியர்களின் கோரிக்கைகள் தொடர்பான முன்னேற்றம் போன்ற விவரங்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள ஏதுவாக உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும், அக்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து விவரங்களையும் நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த பணியாளர்களை இந்த உதவி மையத்தில் பணியமர்த்த தமிழக உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

அந்தந்த கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும் இந்த உதவி மையம், பயனாளிகளுக்கு எளிதில் உதவும் வகையில் (user friendly) அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

台中健身房推薦 world gym費用、健身工廠費用 | [your brand]. Dancing with the stars queen night recap for 11/1/2021. : 작은 프로젝트부터 시작할 수 있는 플랫폼.