தமிழகத்தில் அதிகரித்த யானைகள் எண்ணிக்கை… அரசின் வன உயிரின பாதுகாப்பு நடவடிக்கைகளால் கிடைத்த பலன்!

தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் எல்லையோர மாவட்டங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 23.5.2024 முதல் 25.5.2024 வரை நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் உள்ள 26 வனப் பிரிவுகளில் நடத்தப்பட்டது. இக்கணக்கெடுப்பில் 1,836 வனத்துறை ஊழியர்கள் மற்றும் 342 தன்னார்வலர்கள், என மொத்தம் 2,178 நபர்கள் ஈடுபட்டனர்.

இந்த கணக்கெடுப்பில், சேகரிக்கப்பட்ட தகவல்கள் முறையாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, 26 வனப் பிரிவுகளில் யானைகளின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பானது யானைகளின் எண்ணிக்கை, பாலின விகிதம், யானைகளின் இயக்கவியல் மற்றும் யானைகளின் வாழ்விடத்தை சிறப்பாக நிர்வகிப்பதற்கு யானைகளின் பயன்பாட்டின் பரப்பளவு பற்றிய தெளிவான விவரங்களை வழங்கும்.

யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை

இந்த நிலையில், தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கையையும் அதன் வாழ்வியல் முறைகளையும் அறிந்து கொள்ள உதவிடும் 2024 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

2017 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,761 ஆக இருந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றத்திலிருந்து யானைகளின் பாதுகாப்பிற்காக மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2023-ன் படி தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961 ஆக உயர்ந்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக, 2024 ஆம் ஆண்டிற்கான யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி தமிழகத்தில் தற்போது யானைகளின் எண்ணிக்கை 3063 ஆக உயர்ந்துள்ளது.

மாநில அரசு மேற்கொண்ட பல்வேறு வன உயிரின பாதுகாப்பு நடவடிக்கைகள், குறிப்பாக யானைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் வாயிலாக தமிழ்நாட்டில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அகத்திய மலை யானைகள் காப்பகம், தமிழ்நாடு யானைகள் பாதுகாப்பு இயக்கம், யானைகள் வாழிடங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளும் இதற்கு காரணமாக விளங்கின எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சிறுவர்களிடம் வனவிலங்குகள் விழிப்புணர்வு

மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து தமிழகத்தின் இயற்கை சூழலை பாதுகாத்திடவும், வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கிலும், 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்தது. கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது. பள்ளிக்கரணையில் 2.5 ஹெக்டேர் நிலப்பரப்பில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சதுப்புநில சூழலியல் பூங்கா, சென்னை செனாய் நகரில் மெட்ரோ ரயில் கட்டுமானத்திற்குப் பின்னர் 18 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்ட திரு.வி.க.பூங்கா திறந்து வைக்கப்பட்டது, ஆகியவை குறிப்பிடத்தக்க பசுமை சார்ந்த பணிகளாகும்.

அத்துடன், வனம் மற்றும் வனவிலங்குகள் பற்றிய விழிப்புணர்வுவை சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஏற்படுத்துவதற்காக தற்போதுள்ள சென்னை, கிண்டி சிறுவர் பூங்கா புனரமைக்கப்பட்டு, 30 கோடி ரூபாய் செலவில் சிறுவர்களுக்கு இயற்கை பூங்காவாக அமைக்கப்பட்டுள்ளதை முதலமைச்சர் இன்றைய தினம் திறந்து வைத்தார்.

இப்பூங்கா திறப்பு விழாவின்போது, வனவிலங்குகளை மீட்பதற்கும், வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ போன்ற விபத்துகளை தடுக்கும் பணிகளை மேற்கொள்வதற்காகவும் 9 நவீன வாகனங்களை (All Terrain Vehicles) முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, இப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வேடந்தாங்கல் பறவைகள் இருப்பிடத்தை திறந்து வைத்து, பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளையும் பார்வையிட்டார் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Viols de mazan : à mi chemin du procès, l’ancien professeur de théâtre de gisèle pelicot vient lui apporter son soutien. Facing wаr іn thе mіddlе eаѕt and ukraine, thе us lооkѕ fееblе. Hest blå tunge.