தமிழ்நாட்டில் 6.27 கோடி வாக்காளர்கள்… சென்னையில் 39 லட்சம்!
தமிழ்நாடு முழுமைக்குமான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதில், 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 7 லட்சத்து 90 ஆயிரத்து 791 பேர். பெண் வாக்காளர்கள் 3 கோடியே 19 லட்சத்து 30 ஆயிரத்து 833 பேர் உள்ளனர். மாற்றுப் பாலினத்தவர் 8 ஆயிரத்து 964 பேர் உள்ளனர். தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் சுமார் 11 லட்சத்து 60 ஆயிரம் பேர் அதிகமாக உள்ளனர்.
சென்னையில் 39 லட்சம் வாக்காளர்கள் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 39 லட்சத்து 52 ஆயிரத்து 498 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 19 லட்சத்து 41ஆயிரத்து 271 பேர். பெண்கள் 20 லட்சத்து 9 ஆயிரத்து 975 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 1,252 பேர் இடம்பெற்றுள்ளனர். சோழிங்கநல்லூர் – கீழ்வேளூர் தமிழ்நாட்டில் தற்போது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் பெரிய தொகுதியாகும்.
இங்கு 6 லட்சத்து 76 ஆயிரத்து 133 வாக்காளர்கள் உள்ள னர். மாநிலத்தில் மிகக் குறைந்த வாக்கா ளர்களைக் கொண்ட தொகுதியாக நாகை மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 230 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.
சிறப்பு முகாம்கள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த வாக்காளர்கள் பட்டியலில் திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கென நவம்பர் மாதத்தில் 16, 17, 23, 24 ஆகிய 4 நாட்களில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றை செய்யலாம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.