தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம்: பழனிவேல் தியாகராஜனுக்கு புதிய இலாகா!

மிழக அமைச்சரவையில் விரைவில் சில மாற்றங்களைச் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக
தகவல் வெளியாகி உள்ள நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றங்கள், 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து, கட்சியின் அரசியல் உத்திகளை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், பதவி இழக்கப்போகும் அமைச்சர்கள் யார் யார், புதிதாக யார் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்பது குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளன.

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு புதிய பொறுப்பு?

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பணியாற்றி வரும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மின்சாரத் துறை பொறுப்பு வழங்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, 2021-2023 வரை நிதி அமைச்சராக பணியாற்றிய பழனிவேல், திறமையான நிர்வாகியாக பெயர் பெற்றவர். ஆனால், 2023-ல் அவரது ஆடியோ பதிவு சர்ச்சை காரணமாக நிதித்துறை பறிக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டது. தற்போது, மின்சாரத் துறையை மீண்டும் அவருக்கு வழங்குவதன் மூலம், அவரது அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்க திமுக முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

பொன்முடி, செந்தில் பாலாஜி

வனத்துறை அமைச்சர் க. பொன்முடி, அண்மையில் தனது பேச்சின் மூலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால், அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. மேலும், சென்னை உயர்நீதிமன்றம், பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது, இது அவரது அமைச்சர் பதவிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்கி, அவரது வனத்துறையை வேறு அமைச்சருக்கு ஒதுக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல, அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, 2024 செப்டம்பரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்போது அவர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளை கவனித்து வருகிறார். இந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “செந்தில் பாலாஜிக்கு மெரிட் அடிப்படையில் ஜாமீன் வழங்கவில்லை. அரசமைப்பு சட்டத்தின் 21-வது பிரிவை மீறியதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் வழங்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் அவர் அமைச்சரானதை ஏற்க முடியாது. அமைச்சராக இல்லை என்பதால்தான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. எனவே, அவருக்கு ஜாமீன் வேண்டுமா? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பி உள்ளது.

செந்தில் பாலாஜி தனது கருத்தை தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால், செந்தில் பாலாஜியின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை பொறுப்பு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ். முத்துசாமியிடம் ஒப்படைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் எஸ். முத்துசாமி

2 புதிய அமைச்சர்கள்

தற்போது தமிழக அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் உள்ளனர். இது 234 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும். புதிதாக இரண்டு அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்புள்ளதாகவும், உதய சூரியன் போன்றவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த அமைச்சரவை மாற்றம், திமுக-வின் உள் கட்சி செயல்பாடுகளை வலுப்படுத்தவும், 2026 தேர்தலுக்கு கட்சியைத் தயார்படுத்தவும் முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.

திமுகவின் முக்கிய தலைவர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்குவதன் மூலம், கட்சியின் அரசியல் செல்வாக்கை மாவட்ட அளவில் வலுப்படுத்தலாம் என திமுக தலைமை கருதுவதாக தெரிகிறது.

குறிப்பாக சர்ச்சைகளில் சிக்கிய அமைச்சர்களை மாற்றுவதன் மூலம், பொதுமக்கள் மத்தியில் கட்சியின் நற்பெயரை தக்கவைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மேலும், புதிய முகங்களை அமைச்சரவையில் சேர்ப்பது, கட்சியின் இளம் தலைமுறை தலைவர்களுக்கு வாய்ப்பளிக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ip cam 解決方案. Breaking : chris harrison out as bachelorette host…for now. Blockchain applications in healthcare pharmaguidelines.