Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

15 ஒப்பந்தங்கள்; ரூ. 44,125 கோடி முதலீடுகள் – விரைவில் 24700 பேருக்கு வேலை! தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்

Tamil Nadu Investment

Thangam Thennarasu press meet

ரூ.44,125 கோடி முதலீட்டிற்கான 15 திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்; இதன் மூலம் 24,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று 16-வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தொழில் துறை சார்பில் 24,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.44,125 கோடி முதலீட்டிற்கான 15 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உதிரிப்பாகங்கள் மற்றும் மின்கல உற்பத்தி ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில் நீரேற்று, சிறு புனல் மின் திட்டங்கள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை-2024 ஆகியவற்றுக்குமான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியிருப்பதாகவும்,

வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி இந்தியாவில் முதல் முறையாக, சிப்காட் சார்பில் காஞ்சிபுரம் வல்லம்வடகால் பகுதியில் ரூ. 706.05 கோடியில் பாக்ஸ்கான் நிறுவன பணியாளர்கள் தங்குவதற்காக 18,720 பேர் தங்கும் வகையிலான கட்டிடத்தை முதல்வர் திறந்து வைக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version