ரூ.9,170 கோடி வருவாய் ஈட்டிய தெற்கு ரயில்வே… தமிழக ரயில்களில் வசதிகள் மேம்படுத்தப்படுமா?

டிக்கெட் கட்டணமும் பட்ஜெட்டுக்குள் அடங்கும், பயணம் செய்வதும் வசதியாக இருக்கும் என்பதால், தொலைதூர பயணங்களுக்கு நடுத்தர மற்றும் ஏழை மக்களின் முதல் தேர்வு ரயில் பயணமாக தான் இருக்கும்.

அந்த வகையில், தமிழ்நாட்டுக்குள்ளும் தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங்களுக்கும் இயக்கப்படும் ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வே நல்ல வருவாய் ஈட்டி வருகிறது. கடந்த 2024-25 ஆம் நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் ( ஏப்ரல் – டிசம்பர்) தெற்கு ரயில்வே, 9170 கோடி ரூபாய் அளவுக்கு மொத்த வருவாயை ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 5% அதிகம் ஆகும்.

76 ஆவது குடியரசு தின விழாவையொட்டி, பெரம்பூர் ரயில்வே மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசுகையில் இந்த தகவலைத் தெரிவித்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், ” பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு விடுமுறை நாட்களில் மற்றும் பண்டிகை நாட்களில் 2329 சிறப்பு ரயில்களை இயக்கி உள்ளோம். இது முந்தைய ஆண்டை விட 2.8 மடங்கு அதிகம். கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை சுமார் 604 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரயில்வே சொத்துகள் மீட்கப்பட்டன” எனத் தெரிவித்தார்.

மேலும், 13 ரயில் நிலையங்கள் வேகமாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருவதாகவும், மேலும் கூடுதலாக 95 ரயில் நிலையங்களில் பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக ரயில்களின் நிலை…

இது ஒருபுறம் இருந்தாலும், தெற்கு ரயில்வேக்கு நல்ல வருவாய் ஈட்டிக்கொடுக்கக்கூடிய தமிழகத்தில் ஓடக்கூடிய ரயில்கள் குறித்து பயணிகளிடையே பல்வேறு புகார்கள் உள்ளன. கழிப்பறைகள் மோசமாக பராமரிக்கப்படுவது, மிக பழைய ரயில் பெட்டிகள், ரயில் நிலையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாதது, வழக்கமான ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது,

பண்டிகை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்து முன்கூட்டியே அறிவிக்காமல் கடைசி நேரத்தில் அறிவிப்பது, தெற்கு ரயில்வேயின் கீழ் இயக்கப்படும் ரயில்களில் தமிழகத்தில் ஒருவிதமான அணுகுமுறை, கேரளாவுக்கு வேறுவிதமான அணுகுமுறை எனப் பாரபட்சம் காட்டுவது எனப் பல குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர் தமிழ்நாட்டு பயணிகள்.

நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்

மேலும், அதிகரிக்கும் பயணிகளின் தேவைக்கேற்ற புதிய ரயில்களை அறிமுகப்படுத்தாதது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இருப்பது என இந்திய ரயில்வே துறை மீது தமிழக மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது.

அதே சமயம், டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் பயணிகளை அதிகம் கொண்ட வட மாநிலங்களில் செயல்படும் ரயில்வேக்களுக்கு நிதி ஒதுக்கீடு வாரி வழங்கப்பட்டு, ஏராளமான புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் தமிழக பயணிகள் குமுறுகின்றனர்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கு கடந்த மத்திய பட்ஜெட்டில் வெறும் 1,000 ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் அப்போது அதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனாலும் நிலைமையில், இன்னும் பெரிய அளவில் மாற்றமில்லை.

மனது வைக்குமா மத்திய அரசு?

எனவே, இத்தகைய பாரபட்சமான நிலைக்கு இடையேயும் தெற்கு ரயில்வே 9170 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டி உள்ளதை கருத்தில்கொண்டாவது, தமிழகத்துக்கான ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும், தமிழக ரயில்களில் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.மனது வைக்குமா மத்திய அரசு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bilim tarihimiz İnsan ve kainat. A private yacht charter, a luxury yacht charter, a crewed yacht charter, or a bareboat for sailing ?. hest blå tunge.