கார்த்தியின் ‘சர்தார் 2’ டப்பிங் பணிகள் தொடக்கம்…எப்போது ரிலீஸ் ?

கார்த்தி நடிப்பில் இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார்’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டில் வெளியானது. ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா, ரித்விக், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கியது.
இந்த நிலையில் ‘சர்தார் 2’ பற்றிய புதிய தகவலை தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர். ஆக்ஷன்-த்ரில்லர் படமான ‘சர்தார் 2’ தற்போது அதிகாரப்பூர்வமாக டப்பிங் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இதற்காக கார்த்தி தனது காட்சிகளுக்கு டப்பிங் கொடுக்க தொடங்கியுள்ளார். மேலும் விரைவில் இப்படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளும் இதில் பங்கேற்க உள்ளனர்.
கார்த்தியுடன் இணைந்து ரஜிஷா விஜயன் மீண்டும் இந்த படத்தில் நடிக்கவுள்ளார். ஆனால், அவருடைய கதாபாத்திரம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், அஷிகா ரங்கநாத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு ஜார்ஜ் சி வில்லியம்ஸ், எடிட்டிங் விஜய் வெலுக்குட்டி, சண்டைப்பயிற்சி திலீப் சுப்புராயன்.
இந்தப் படத்தை எஸ். லட்சுமண் குமார் தயாரிக்க, வெங்கடேஷ் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்பாளர்கள் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.இருப்பினும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.