Sanctity Ferme: பசுமை சோலையில் ஒரு குடியிருப்பு… உங்கள் உணவுத் தேவைகளை நீங்களே பயிரிட்டுக்கொள்ளலாம்!
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மையப்பகுதியில், இயற்கையும் நவீன வாழ்க்கை அம்சங்களும் பின்னிப்பிணைந்த பசுமை சரணாலயம் ஒன்றை உருவாக்கி உள்ளது சான்க்டிட்டி ஃபெர்ம் (Sanctity Ferme) என்ற நிறுவனம்.
இது, திரூர்கரன் பைஜு என்பவரால் தொலைநோக்கு திட்டத்துடன் நிறுவப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். பசுமை, அமைதி மற்றும் நிலையான வாழ்க்கை முறையை விரும்புவர்களுக்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது இந்த நிறுவனம்.
பெங்களூருவில் உள்ள சிஸ்கோ நிறுவனத்தில் பணிபுரிந்த பைஜு, விவசாயத்தின் மீது தீரா ஆர்வம் கொண்டவர்.கடந்த ஐந்து ஆண்டுகளில், 5 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை விளைநிலங்களில் நட்டு, எந்தவித விளம்பரமும் மேற்கொள்ளாமல் தமிழகத்தின் காலநிலை மாற்ற செயல்திட்டத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது இவரது இந்த நிறுவனம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் 300 ஏக்கர் விவசாய நிலத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த நோக்கம் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. ‘நிர்வகிக்கப்பட்ட விளை நிலங்களை’ சந்தைப்படுத்தும் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்களைப் போல் அல்லாமல், சான்க்டிட்டி ஃபெர்ம் நிறுவனம் தனது உண்மையான செயல்பாட்டை செய்து காட்டியுள்ளது.
காத்திருக்கும் பசுமை சோலை
அமைதி தவழும் அழகுடன், பசுமையான சோலையாக காட்சி அளிக்கும் நிலபரப்புக்கு உள்ளே ஒவ்வொரு காலையிலும் கண் விழித்து எழுந்திருப்பதை கற்பனை செய்து பாருங்கள். சான்க்டிட்டி ஃபெர்ம், தனது குடியிருப்பாளர்களுக்கு நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து தப்பித்து இயற்கையோடு மீண்டும் இணையும் வாய்ப்பை வழங்குகிறது.ஒவ்வொரு குடியிருப்புக்கான நிலமும் பசுமையால் சூழப்பட்டிருப்பதை உறுதிசெய்யும் வகையில்,கவனமாகத் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு கேட்கும் ஒரே சத்தம் பறவைகள் மற்றும் சலசலக்கும் இலைகள் மட்டுமே.
பசுமை சரணாலயத்தில் அற்புத வாழ்க்கை
சான்க்டிட்டி ஃபெர்மில், விவசாயத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், நிலையான வாழ்க்கைக்கான முன்மாதிரியை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
பண்ணையில் நாட்டு மாடுகள், ஆடுகள், வாத்துகள், முயல்கள், கோழிகள் மற்றும் குதிரைகள் உள்ளன. இவை அனைத்தும் பண்ணையின் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. உயிரி உரம் மற்றும் இயற்கை உரங்கள் போன்ற இயற்கை வேளாண்மை முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், பண்ணை இயற்கையுடன் இணக்கமாக இருப்பதை உறுதி செய்கிறது.
நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து தப்பிக்க விரும்புபவர்களுக்கு இது ஓர் அற்புத அனுபவம். பார்வையாளர்கள் வார இறுதியில் இந்த விவசாயப் பண்ணையில் பொழுதைக் கழிக்கலாம், இயற்கையான சூழலுடன் தடையின்றி நம்மை ஒன்றிணைக்கும் அழகாக வடிவமைக்கப்பட்ட வீடுகளில் தங்கலாம்.
குதிரை சவாரி மற்றும் மலையேற்றப் பாதைகள் முதல் பருவகால அறுவடை திருவிழாக்கள் மற்றும் கலாசார நிகழ்வுகள் வரை அனைத்தும் நடக்கிறது. ஒரு கைவிடப்பட்ட குவாரியை அழகான பொழுதுபோக்கு பகுதியாக மாற்றியிருக்கிறோம். இங்கு ஒவ்வொருவருக்கும் கண்டு களிக்க ஏதாவது இருக்கின்றன.
இங்குள்ள கொலோசியம் (Colosseum) ஓர் அற்புதமான பகுதி. இது நீச்சல் குளம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான மேடை ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது ஒட்டுமொத்த அனுபவத்திற்கு ஒரு தனித்துவமான அழகைச் சேர்க்கிறது.
“சான்க்டிட்டி ஃபெர்மின் அமைதியான அரவணைப்பில் மூழ்கி, மறக்க முடியாத அனுபவங்களின் பயணத்தைத் தொடங்குங்கள்” என அழைப்பு விடுக்கும் பைஜு.
“எங்கள் தோட்டங்களில் இருந்து ஸ்ட்ராபெர்ரிகளை நீங்கள் பறிக்கலாம், பண்ணையைச் சுற்றி குதிரை சவாரி செய்து மகிழலாம். இங்குள்ள ஒவ்வொரு கணமும் இயற்கையுடன் மீண்டும் இணைவதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்கிறார்.
விற்பனைக்குத் தயார்
சான்க்டிட்டி ஃபெர்ம் இப்போது தனது பசுமை பண்ணையில் பலவிதமான சொத்துகளை விற்பனைக்கு வழங்குகிறது. இந்த தனித்துவமான பசுமை சமூகத்தின் ஒரு பகுதியாக நீங்களும் இருக்க உங்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
நான்காம் கட்ட திட்டம் செயல்பாட்டில் இருப்பதாலும், ஐந்து மற்றும் ஆறாவது கட்டங்கள் பற்றிய திட்டமிடுதல் இருப்பதாலும், சான்க்டிட்டி ஃபெர்மில் நீங்களும் உங்களுக்குத் தேவையான நிலத்தை வாங்கலாம்.பசுமையான எதிர்காலத்தை நோக்கிய இந்தப் பயணத்தில் நீங்களும் உங்களை இணைத்துக் கொள்ள சான்க்டிட்டி ஃபெர்ம் அழைக்கிறது.
நீங்களும் இணைய தயார்தானே..?