இந்த ஆண்டு எந்தெந்த துறையில் எவ்வளவு சம்பளம் உயரும்..? ஆய்வறிக்கை சொல்லும் தகவல்!

மெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், அந்நாட்டின் தொழில் மற்றும் வர்த்தக கொள்கைகளில் அறிவிக்கப்பட்டு வரும் மாற்றங்கள், பூகோள அரசியல் பதற்றங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் போன்றவை காரணமாக உலகளாவிய அளவில் நிச்சயமற்ற பொருளாதார நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில், 2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அது வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இடையே இந்த ஆண்டுக்கான சம்பள உயர்வு எப்படி இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு எந்தெந்த துறைகளில், எவ்வளவு சதவீதம் சம்பள உயர்வு இருக்கும் என்பது குறித்து Aon plc என்ற தொழில்முறை சேவை நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 2025 ல் சராசரியாக 9.2% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கடந்த 2024 ஆம் ஆண்டு இது 9.3 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தெந்த துறையில் எவ்வளவு சம்பள உயர்வு?

45 தொழில் துறைகளில் 1,400 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தரவை பகுப்பாய்வு செய்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், பொறியியல் வடிவமைப்பு சேவைகள் (tech consultancy) மற்றும் ஆட்டோ/வாகன உற்பத்தித் துறைகள் 10.2 % என்ற அளவுக்கு சம்பள வளர்ச்சியைக் காணும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு பொறியியல் வடிவமைப்பு சேவைகளின் சம்பள உயர்வு 10.2 சதவீதமாகவும், ஆட்டோ/வாகன உற்பத்தித் துறைகளின் சம்பள உயர்வு 10.1 சதவீதமாகவும் இருந்தது.

அதே சமயம் 2024 ல் 10.6% சம்பள உயர்வைக் கண்ட ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் 2025 ஆம் ஆண்டுக்கான சம்பள உயர்வு 9.7% ஆகக் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், சில்லறை விற்பனை, உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் Life science துறைகளும் சராசரியை விட அதிகமான சம்பள உயர்வுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய திறன் மையங்கள் சம்பள உயர்வு 9.7% ஆக உயரும் என்றும், சில்லறை விற்பனை துறையில் 9.8 சதவீத சம்பள உயர்வும், Life science துறை சம்பள உயர்வு 9.5% என்ற அளவில் ஆக நிலையாக இருக்கும் என எதிர்பார்க்க்கப்படுவதாகவும் அந்த ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

“ஊதிய உயர்வுகளில் திட்டமிடப்பட்ட மிதமான தன்மை, புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள், அமெரிக்க வர்த்தகக் கொள்கைகள் மற்றும் AI துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் போன்ற வெளிப்புற காரணிகள் பிரதிபலிக்குகும்” என்று Aon நிறுவனத்தின் கூட்டாளியும் Talent Solutions India க்கான ஆலோசனைத் தலைவருமான ரூபங்க் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

Christianity archives the nation digest. Dprd kota batam.