அரசுப் பேருந்துகள் Vs ஆம்னி பேருந்துகள்… சென்னைவாசிகள் அதிகம் பயணிப்பது எதில்?

பணி நிமித்தம் அல்லது பொருளாதார தேவைகளை ஈட்டுவதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலிருந்து வந்து சென்னையில் இருப்பவர்கள் ஏராளம். அந்த வகையில், இவர்கள் பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜை, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில், குறிப்பாக தொடர் விடுமுறை கிடைத்தால் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து விடுவார்கள்.

இதில் பண்டிகைக்கு முந்தைய தினங்களுக்கான ரயில் டிக்கெட்டுகள், 60 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிடும். இதனால், அடுத்த வாய்ப்பு பேருந்துகள் தான். இதில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வழக்கமான நாட்களில் இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளை இயக்கினாலும், கணிசமானோர் கட்டணம் அதிகம் இருந்தாலும் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிப்பதையே விரும்புகின்றனர். கடந்த வாரம் பொங்கலையொட்டி, கோயம்புத்தூருக்கான ஏ.சி ஸ்லீப்பர் டிக்கெட்டுகள் 5,000 ரூபாய் வரை விற்றன.

அதே சமயம், ‘பட்ஜெட்டுக்கு ஏற்ற பயணம்’ என்ற வகையில் வருவோர் அரசுப் பேருந்துகளை நாடுகின்றனர். இதில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் ஓரளவு நல்ல நிலைமையில் காணப்பட்டாலும், சிறப்பு பேருந்துகள் என இயக்கப்படும் பேருந்துகள் பெரும்பாலும் 3 + 2 இருக்கையுடன் கூடிய மஃப்சல் பேருந்துகளாக இருப்பதால், அதில் பயணிப்பது என்பது வசதி குறைவாகவே காணப்படுகின்றன.

ஆம்னி பேருந்துகளை விரும்ப காரணம்

இப்படியான நிலையில், சென்னையிலிருந்து பயணிப்பவர்களில் எந்தெந்த வழித்தடங்களில் செல்வோர், எந்தெந்த வகை பேருந்துகளை விரும்புகின்றனர் என்பது குறித்து தகவல், அரசுப் போக்குவரத்துக் கழக மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்களின் தரவுகள் மூலமாகவும், தனியார் பேருந்து முன்பதிவு சேவை நிறுவனமான ‘ரெட் பஸ்’ தரவுகள் மூலமாகவும் தெரியவந்துள்ளது.

அந்த வகையில், இந்த பேருந்துகளின் முன்பதிவுகளை பகுப்பாய்வு செய்ததில், சென்னையில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளில் கிட்டத்தட்ட 70% ஏசி பேருந்துகளுக்கானவை என்று தெரியவந்துள்ளது. “இந்த பயணிகளில் பெரும்பாலானோர், குறிப்பாக ஐடி நிறுவன பணியாளர்கள் என்றும், இவர்களில் அதிகம்பேர் சென்னை- பெங்களூரு வழித்தடத்தில் பயணிப்பவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்தாலும், சொகுசான ஏ.சி ஸ்லீப்பர் வசதி அல்லது இருக்கைகள், துல்லியமான பயண நேரம், சுத்தமான கழிவறை வசதிகளுடன் கூடிய உணவு விடுதிகளில் நிறுத்தம், இவையெல்லாவற்றுக்கு மேலாக கிளாம்பாக்கம் வரை செல்லாமல் சென்னை நகருக்குள்ளிருந்தே பயணிக்கும் அல்லது வந்து இறங்கும் வசதி போன்றவை காரணமாக அத்தகைய தனியார் பேருந்துகளில் பயணிப்பதையே அதிகம் விரும்புகின்றனர்” என்கிறார்கள் தனியார் பேருந்து நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்.

அரசுப் பேருந்துகளில் பயணிப்பவர்கள்

அதே சமயம், இதற்கு நேர்மாறாக, திருச்சி மற்றும் மதுரை வழித்தடத்தில் செல்லும் பயணிகள் சிக்கனமான மற்றும் நிலையான கட்டணங்களுக்காக அரசு பேருந்துகளைத் தேர்வு செய்கிறார்கள். ஆன்லைன் முன்பதிவுகளின் அளவைப் பொறுத்து பண்டிகையொட்டிய தினங்களில் பேருந்து சேவைகளின் எண்ணிக்கையை தீர்மானிப்பதாக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, கடந்த வார இறுதியில், 35,000 க்கும் மேற்பட்ட பயணிகள் மதுரை மற்றும் திருச்சிக்கு அரசு பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். இந்த முன்பதிவு தரவு மாவட்ட அதிகாரிகளுக்கு பேருந்துகளை ஒதுக்க வழங்கப்படுகிறது.

சராசரியாக, SETC ஒவ்வொரு வார இறுதியில் மதுரை மற்றும் தென்மாவட்டங்களுக்கு 100 க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்குகிறது, ஆனால் அதில் கால் பகுதி மட்டுமே கோயம்புத்தூருக்கு இயக்குகிறது. ‘ரெட்பஸ்’ போன்ற ஆன்லைன் வணிக சேவை தளங்களும் ஆபரேட்டர்களுடன் முன்பதிவுகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தங்களது பிசினஸ் உத்திகளைத் தீர்மானிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

devamını oku ». Enes kaan : gulet mit 3 kabinen und 6 gästen zum chartern – fethiye, göcek – türkei. Her er, hvad du kan gøre for at sikre, at din hests tænder forbliver sunde :.