பொங்கல் சிறப்பு பேருந்துகள்: ஒரே நாளில் 1.50 லட்சம் பேர் பயணம்!

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக, தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், ஜனவரி 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

“சென்னையில் இருந்து தினமும் வழக்கமாக இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்புப் பேருந்துகள் என 4 நாட்களுக்கு மொத்தம் 14,104 பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 7,800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதன் மூலம், பொங்கல் பண்டிகைக்காக 4 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து மொத்தம் 21,904 பேருந்துகள் இயக்கப்படும்” என்று அரசுப் போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகளின் தொடங்கியது. ஒரேநாளில் 1.50 லட்சம் பேர் பயணித்ததாக தெரியவந்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் பல்வேறு முக்கிய பகுதிகளில் இருந்து வெவ்வேறு ஊர்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 1,560 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சென்னையைப் பொருத்தவரை 3 இடங்களில் இருந்து 1,445 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதன்படி காலை முதலே நிலையத்துக்கு எடுத்து பேருந்துகள் வரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் பயணிப்பதற்காக மாலை முதல் பேருந்து நிலையங்களை நோக்கி பொதுமக்கள் வரத் தொடங்கினர். இதற்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 320 இணைப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

போக்குவரத்து நெரிசல்

மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோருடன், ஊர்களுக்குச் செல்வோரும் சேர்ந்ததால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. ஜிஎஸ்டி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜீவ்காந்தி சாலை, கிண்டி, தாம்பரம், கூடுவாஞ்சேரி, போரூர் ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தென் மாவட்டங்களுக்கு படையெடுத்த வாகனங்களால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் பல மணி நேரமாக காத்திருந்து மெதுவாக ஊர்ந்து சென்றன.

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர்- செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு உற்சாகமாக பயணித்து வருகின்றனர். நாளையும் நாளை மறுதினமும் அதிகமான பயணிகள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம் சென்னையில் இருந்து 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். இதைத் தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 13 ஆம் தேதி வரை சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என எதிர்பார்ப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆம்னி பேருந்துகள் மீது புகார்

இதற்கிடையே, ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தை விட இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது .சென்னையிலிந்து கோவைக்கு ஏசி ஸ்லீப்பர் கோச் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் 5,000 வரை இருப்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

» kış saatine neden alışamıyoruz ?. Exclusive luxury yacht charters : fun and sun. hest blå tunge.