தென்பெண்ணையாற்றில் வட்டச் சில்லுகள், ராமநாதபுரத்தில் 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டெடுப்பு!

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே தென்பெண்ணையாற்றில், சுடுமண் பொம்மைகள், வட்டச் சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், மணமேடு பகுதியை சேர்ந்த சசிதரன், சீனுவாசன் ஆகியோர் இங்கு கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சிதைந்த முதுமக்கள் தாழிகள், உறை கிணறு, சுடுமண் பொம்மை, அகல் விளக்கு, வட்டச் சில்லு, சோழர் கால மற்றும் ஆங்கிலேயர் காலத்து செப்பு நாணயங்கள் கிடைத்துள்ளன.

இது குறித்து இம்மானுவேல் கூறுகையில், “கண்டெடுக்கப்பட்டுள்ள சுடுமண் பொம்மைகள், வட்டச் சில்லுகளை வைத்து பார்க்கும் போது, வாழப்பட்டு தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளிலும், பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கிடைத்துள்ளன.

இதில், சோழர், ஆங்கிலேயர் கால செப்பு நாணயங்கள் சிதைந்த நிலையில் உள்ளதால், எந்த ஆண்டு எனச் சரியாக கூற இயலவில்லை. ஏற்கனவே காவனுார், எனதிரிமங்கலம் ஆற்றங்கரை பகுதிகளில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

ராமநாதபுரம் மாவட்டம், கள்ளிக்கோட்டை சிவன் கோயிலில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு துண்டுக் கல்வெட்டுகளை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டெடுத்துள்ளது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இடிந்த நிலையில் உள்ள கள்ளிக்கோட்டை சிவன் கோயிலை ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு இரு துண்டுக் கல்வெட்டுகளைக் கண்டுபிடித்து படியெடுத்து ஆய்வு செய்தார்.

இந்த கோயிலில் சிவன் சன்னிதியில் ஆறு துண்டுக் கல்வெட்டுகளையும், அம்மன் சன்னிதியில் ஒரு கல்வெட்டையும் அமர்நாத் ராமகிருஷ்ணா குழுவினர் ஏற்கெனவே பதிவு செய்துள்ளனர். தற்போது புதியதாக சிவன் சன்னிதியில் முன்மண்டபத்தின் கீழே ஜகதியின் பக்கவாட்டிலும், மேற்பகுதியிலும் இந்த இரண்டு துண்டுக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் கி.பி.13 ஆம் நூற்றாண்டு மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலக் கல்வெட்டுகள் ஆகும் என ராஜகுரு தெரிவித்தார்.

இதில் இரண்டு வரிகள் உள்ள ஒரு கல்வெட்டில் ‘ஸ்ரீகோமாறபன்மறான திரிபுவனச் சக்கரவத்தி’ எனக் குறிப்பிடப்படுவது முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனையும், மற்றொரு 4 வரிகள் கொண்ட கல்வெட்டில், இக்கோயிலுக்கு தேவதானமாக வழங்கப்பட்ட நிலத்தில் ஐப்பசிக் குறுவை விளையும் கலத்துக்கு ஒன்று பாதியும், (சந்தி) விக்கிரகப்பேறு ஆகிய வரிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் மிழலைக்கூற்றம், திருக்கானப்பேற் கூற்றம் ஆகிய கூற்றங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dprd kota batam. Dancing with the stars queen night recap for 11/1/2021. Microsoft translator embraces diversity with 2 new languages, including chhattisgarhi and manipuri support.