திறப்புக்குத் தயார்…பாம்பன் புதிய ரயில்வே பாலத்தின் சிறப்புகள் என்ன?

ராமேஸ்வரம் என்றாலே அங்குள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது பாம்பன் ரயில்வே பாலம் தான்.

இப்பாலம் கட்டப்பட்டு 110 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடல் அரிப்பின் காரணமாக பாலத்தின் பல இடங்களில் உறுதித்தன்மை குறைந்தது. கப்பல் போக்குவரத்துக்காக பயன்படும் ‘தூக்கு பாலத்தில்’ அவ்வப்போது பழுதும் ஏற்பட்டது. எனவே, பாதுகாப்பு கருதி இப்பாலத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதியுடன் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, பழைய பாம்பன் ரயில் பாலம் அருகே புதிய ரயில் பாலம் கட்ட ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்கான பணிகளுக்கு 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 2 ஆயிரத்து 78 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு வந்த நிலையில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி முழுமையாக நிறைவடைந்து, தற்போது பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது.

சிறப்புகள் என்னென்ன?

புதிய பாம்பன் பாலத்தில் மொத்தம் 101 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. பழைய பாலத்தைவிட புதிய ரயில் பாலம் 3 மீட்டர் உயரமாக கட்டப்பட்டுள்ளது. அதாவது கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரமாக இந்த பாலம் உள்ளது. ஒவ்வொரு தூண்கள் இடையே 60 அடி நீளம் கொண்ட 99 இணைப்பு பகுதி (கர்டர்கள்) பொருத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இரயில் பாதையை மேம்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘ரயில் விகாஷ் நிகாம் லிமிட்டெட்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து தெற்கு ரயில்வே புதிய ரயில் பாலத்தை கட்டி முடித்துள்ளது.

ரயில்வே பாலத்தின் குறுக்கே கப்பல்கள் எளிதாக செல்லும் வகையில், முழு தானியங்கி ‘எலெக்ட்ரோ-மெக்கானிக்கல்’ அமைப்பு கொண்ட செங்குத்து தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. செங்குத்தாக பாலத்தை உயர்த்துவதன் மூலம் பெரிய கப்பல்கள் கடல் வழியாக தடையின்றி செல்ல முடியும். கப்பல்கள் எளிதாக செல்லும் வகையில் செங்குத்து தூக்கு பாலம் 17 மீட்டர் உயரத்திற்கு மேலே செல்லும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே நடுக்கடலில் செங்குத்து தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு இரட்டை ரயில் பாதை அமைக்கும் வகையில் அடித்தளமும் தூண்களும் அகலமாக அமைக்கப்பட்டுள்ளன. 3 நிமிடத்தில் திறந்து 3 நிமிடத்தில் மூடப்படும் வகையில் செங்குத்துபாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே துறையின் பொறியியல் அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் பாம்பன் புதிய ரயில் பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

» kış saatine neden alışamıyoruz ?. Tägliche yacht und boot. : en ensom hest kan vise tegn på rastløshed som at gå rundt i cirkler i boksen eller græsse på samme sted konstant.