ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 6 தமிழ் படங்கள்!
சினிமா உலகில் பெருமைக்குரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது, ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆஸ்கர் விருதை ஏ.ஆர்.ரகுமான் கடந்த 2008 ஆம் ஆண்டு slumdog millionaire படத்திற்காக வென்றார். கடந்த ஆண்டு இசையமைப்பாளர் கீராவணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக ஆஸ்கர் விருது வென்றனர்.
இந்த நிலையில், 97 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவிலிருந்து கலந்துகொள்வதற்கான படத்தைத் தேர்வு செய்யும் குழுவுக்கு நாடு முழுவதும் இருந்து 29 படங்களை இந்திய திரைப்பட கூட்டமைப்பு பரிந்துரை செய்து அனுப்பியது. இந்த 29 படங்களையும் பார்த்த தேர்வுக் குழுவினர், இறுதியாக ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பில் ‘லாபட்டா லேடீஸ்’ என்ற இந்தி படத்தைத் தேர்வு செய்தனர். அதன்படி ஆஸ்கர் விருதுக்கான சிறந்த வெளிநாட்டு படங்கள் போட்டிக்கு இப்படம் அனுப்பப்படுகிறது.
முன்னதாக தமிழ் திரையுலகில் இருந்து வாழை, கொட்டுக்காளி, தங்கலான், மகாராஜா, ஜமா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய 6 படங்கள் பரிந்துரைக்கப்பட்டன.
தமிழ் திரைப்படங்கள் தவிர, பிற இந்திய மொழிகளிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள் வருமாறு:
இந்தி
லாபட்டா லேடீஸ் , சோட்டா பீம் அண்ட் தி கர்ஸ் ஆப் தம்யான், குட் லக், கில் , அனிமல், ஸ்ரீகாந்த், சந்து சாம்பியன், ஜோரம், சாம் பகதூர், ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர் , ஆர்டிகிள் 370
மராத்தி
மைதான், காரத் கணபதி, ஸ்வார கந்தர்வா வீர் பாட்கே, காத்
ஒடியா
ஆபா
மலையாளம்
ஆல் வி இமேஜின் அஸ் லைட், ஆடுஜீவிதம், உள்ளொழுக்கு, ஆட்டம்
தெலுங்கு
மங்களவாரம், கல்கி 2898 ஏடி, அனுமான்