NIRF Ranking 2024: தமிழ்நாட்டின் என்னென்ன கல்லூரிகள் எந்த இடத்தை பிடித்துள்ளன?

NIRF ranking: Anna University first among state-funded
தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டை சார்ந்த கல்லூரிகள் பல முன்னிலையில் இருக்கின்றன.
இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலைத் தேசிய கல்வி நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிடும். அதேபோல் 2024ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் வெளியாகி உள்ளது.
என்னென்ன பிரிவுகள்:
சிறந்த பல்கலைக்கழகங்கள், சிறந்த கல்லூரிகள், சிறந்த பொறியியல், மருத்துவம், சட்டம், மேலாண்மைக் கல்லூரிகள், பார்மா கல்லூரிகள், கட்டிடக்கலை மற்றும் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் என 13 பிரிவுகளிலும், திறந்த பல்கலைக்கழகங்கள், திறன் பல்கலைக்கழகங்கள், மாநில நிதியுதவி பெறும் அரசுப் பல்கலைக்கழகங்கள் என 3 புதிய பிரிவுகளிலும் இந்த ஆண்டுக்கான தரவரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன.
தரவரிசை:
இந்த பட்டியலில் மெட்ராஸ் IIT கல்வி நிறுவனம் தேசிய அளவில் சிறந்த நிறுவனமாகத் தேர்வாகியுள்ளது. அதேபோல் சிறந்த பொறியியல் கல்லூரி வரிசையில் மெட்ராஸ் IIT முதலிடமும், திருச்சி NIT 9வது இடமும் பெற்றுள்ளன.

சிறந்த கல்லூரி தரவரிசையில் கோயம்புத்தூர் PSGR கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி 7வது இடத்தையும் சென்னை சென்னை லயோலா கல்லூரி 8வது இடத்தையும் பிடித்துள்ளன.
சிறந்த மருத்துவக் கல்லூரி தரவரிசையில் வேலூர் CMC கல்லூரி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
சிறந்த பல் மருத்துவக் கல்லூரி தரவரிசையில் சென்னை சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ் கல்லூரி முதலிடத்தையும் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் எட்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.
சிறந்த பார்மசி கல்லூரியாக ஊட்டி JSS மருந்தியல் கல்லூரி நான்காம் இடத்தை பிடித்துள்ளன.
சிறந்த மாநில பொது பல்கலைக்கழக தரவரிசையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
புதுமை கண்டுபிடிப்புகளில் சிறந்த கல்வி நிறுவன தரவரிசையில் மெட்ராஸ் IIT இரண்டாம் இடத்தையும், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 10வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களில் மெட்ராஸ் IIT இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.