புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் கோலாகலம்… சிறப்பு பிரார்த்தனைகள்!

புத்தாண்டை வரவேற்று தமிழகம் முழுவதும் மக்கள் ஆடிப் பாடி மகிழ்ந்து கோலாகலமாக கொண்டாடியதோடு, கோவில்களிலும் சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதேபோன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

சென்னை, திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வாணவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சென்னை, திருச்சி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருத்தணி, பழனி, திருச்செந்தூர் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பல கோயில்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.

சென்னையில் கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலை போன்ற பகுதிகளில், பைக் ரேஸ் தடுப்பு நடவடிக்கையாக 30 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. சென்னை விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டு இருந்தன.

சென்னை, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் பீச் உள்பட பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி காணப்பட்டது. இது தவிர, சென்னை தி.நகர் உட்பட நகரின் பல இடங்களில் உள்ள பப்கள், நட்சத்திர விடுதிகள் மற்றும் மகாபலிபுரம் உள்பட சென்னை கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள ரிசார்ட்டுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக காணப்பட்டது. இதேபோன்று அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களிலும், குடியிருப்புவாசிகள் ஒன்றிணைந்து புத்தாண்டை வரவேற்று ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறி கொண்டாடினர்.

சென்னை போன்று திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இதேபோன்ற கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

திருப்பதி, அயோத்தியில்…

அதேபோன்று நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி காணப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இதேபோல், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ள ஸ்ரீ மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்க கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.

அயோத்தியில் புத்தாண்டு வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சரயு நதியில் நீராடி சூரியனுக்கு தீபம் காட்டி, பின்னர் ராமர் கோயில் சென்று வழிபாடு மேற்கொண்டனர். உத்தராகண்ட்டின் ஹரித்வார் நகரில் அதிகாலை முதலே பக்தர்கள் கங்கையில் நீராடி வழிபாடு மேற்கொண்டனர். ஒடிசாவின் பூரி ஜெகந்நாதர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bilim tarihimiz İnsan ve kainat. Explore luxury yachts for charter;. hest blå tunge.