தமிழ்நாட்டில் ரூ. 2,000 கோடியில் ட்ரில்லியன்ட் நிறுவன உற்பத்தி ஆலை!

மிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சான்பிரான்சிஸ்கோ, சிக்காக்கோ உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று முதலீட்டாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடக்க அழைப்பு விடுத்து, மாநிலத்தில் இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்தார்.

முதலமைச்சரின் இந்த முயற்சி காரணமாக உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகின.

ரூ. 2,000 கோடியில் ட்ரில்லியன்ட் உற்பத்தி ஆலை

அந்த வகையில் தற்போது ட்ரில்லியன்ட் (Trilliant) நிறுவனத்துடன் 2000 கோடி ரூபாயில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், தமிழ்நாட்டில் அதன் உற்பத்தி ஆலையை நிறுவும். இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், ” ட்ரில்லியன்ட் நிறுவனம், தமிழ்நாட்டில் அதன் உற்பத்தி அலகு, வளர்ச்சி மற்றும் உலகளாவிய உதவி மையத்தை நிறுவிட 2000 கோடி ரூபாயில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டேன். இந்த மதிப்புமிக்க கூட்டாண்மைக்கு ட்ரில்லியன்ட்டுக்கு நன்றி!

Nike உடன் அதன் காலணி உற்பத்தியை விரிவுபடுத்துவது மற்றும் சென்னையில் ஒரு தயாரிப்பு, உருவாக்கம் மற்றும் வடிவமைப்பு மையம் நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை மேற்கொண்டேன்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆப்டம் (Optum) நிறுவனத்தில் 5,000 பேர் வேலை செய்து வரும் நிலையில், அந்நிறுவனம் சுகாதாரத் துறைக்கான திறமையாளர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. திருச்சி மற்றும் மதுரையில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்தும் பரிசீலிக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேன். முன்னெடுப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bahas 2 agenda penting, pjs wali kota batam hadiri rapat paripurna dprd kota batam. Alex rodriguez, jennifer lopez confirm split. Sought to oust house speaker mike johnson.