கும்பகோண விளக்கு… பவானி ஜமுக்காளம்… அமெரிக்க முதலீட்டாளர்களை அசரவைத்த முதலமைச்சரின் பரிசு பெட்டகம்!

மிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேற்று முன்தினம் சான் பிரான்ஸிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார்.

அப்போது, உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக முதலீட்டாளர்களுக்கு இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட ‘தடம்’ என்ற பரிசு பெட்டகத்தை அளித்து வருகிறார். ‘தடம்’ திட்டத்தின்கீழ் கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் சந்திக்கும் முதலீட்டாளர்களுக்கு ‘தடம்’ பரிசு பெட்டகத்தை அளித்து வருகிறார்.

முதலமைச்சர் வழங்கி வரும் இந்த பரிசு பெட்டகத்தில் உள்ள பொருட்கள் அமெரிக்க முதலீட்டாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கும்பகோண குத்து விளக்கு, பவானி ஜமுக்காளம் என முதலமைச்சர் வழங்கிய அந்த பரிசு பெட்டகத்தில் என்னென்ன பொருட்கள் இடம்பெற்றுள்ளன என்பதை கீழே தெரிந்துகொள்ளலாம்.

பரிசு பெட்டகத்தில் என்னவெல்லாம் இருக்கு?

திருநெல்வேலியில் உருவாகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை

புலிகாட்டிலிருந்து பனை ஓலை ஸ்டாண்ட்

விழுப்புரத்தைச் சேர்ந்த டெரகோட்டா சிற்பங்கள் (குதிரை)

கும்பகோணத்திலிருந்து பித்தளை விளக்கு

நீலகிரியிலிருந்து தோடா எம்பிராய்டரி சால்

வானியிலிருந்து பவானி ஜமுக்காளம்

தமிழ்நாட்டின் வளமான பண்பாட்டை பாதுகாக்கும் வகையில் பாரம்பரியமிக்க கைவினைப் பொருள்களுக்கு புத்துயிர் அளிக்கவும், சமகாலத்தில் அதன் முக்கியத்துவத்தை பறைசாற்றுவதற்காவும் ‘தடம்’ திட்டம் உருவாக்கப்பட்டது. பழங்கால கைவினைப் பொருள்களை சமகால தமிழர் பண்பாட்டுடன் இணைப்பதன் மூலம் அவற்றை உயிர்ப்புடன் வைத்திருப்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் ஆகும்.

பவானி ஜமுக்காளம்

அதேபோல் கைவினைக் கலைஞர்களை பன்னாட்டு சந்தைகளுடன் இணைத்து, தமிழ்நாட்டின் பண்பாட்டை உலகளவில் கொண்டு செல்ல இத்திட்டம் உதவுகிறது. பவானியின் ஜமுக்காளம் நெசவாளர்கள் முதல் கள்ளக்குறிச்சியின் டெரகோட்டா கைவினைக் கலைஞர்கள் மற்றும் நீலகிரியின் தோடா எம்பிராய்டரி கலைஞர்கள் வரை, சிறு சிறு சமூகங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Guerre au proche orient : le hezbollah menace israël de nouvelles attaques en cas de poursuite de son offensive au liban. Husqvarna 135 mark ii. Donec ultrices ligula at nibh laoreet ultricies vel sed odio.