மகாராஜா: 6 வாரங்கள் ஆகியும் டாப் 10 வரிசையில் டிரெண்டிங்… நெட்பிளிக்ஸ்சிலும் முன்னிலை!

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பைப் பெற்று வருகிறது. விஜய் சேதுபதிக்கு 50 ஆவது திரைப்படமான இந்த படம் அவருக்கு, ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது.

கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலைத் தாண்டியது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஜூலை 12 ஆம் தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்சில் இப்படம் வெளியிடப்பட்டது

இதன்மூலம் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் ‘மகாராஜா’ கவனம் ஈர்த்தது. படத்தைப் பார்த்த ஏராளமானோர் மகாராஜாவை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் 2024 ல் நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையை ‘மகாராஜா’ பெற்றுள்ளது. உலகம் முழுவதிலும் நெட்பிளிக்ஸ்சில் சுமார் 18.6 மில்லியன் பேர் ‘மகாராஜா’ படத்தைப் பார்த்துள்ளனர்.

முன்னதாக கரீனா கபூர், கீர்த்தி சானோன்,தபு ஆகியோர் நடித்த Crew திரைப்படம் 17.9 மில்லியன் பார்வைகளுடனும், லாப்பாட்டா லேடீஸ் படம் 17.1 மில்லியன் பார்வைகளுடனும் முன்னிலையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ரிலீசாகி 6 வாரங்கள் ஆகியும் உலகம் முழுவதிலும் சுமார் 8 நாடுகளில் டாப் 10 வரிசையில் ‘மகாராஜா’ டிரெண்டிங்கில் உள்ளது அப்படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

League of legends wasd movement controls may soon be a reality. Single game scoring mark. The iran israel conflict has a long history.