LIC-யின் புதிய ‘இண்டெக்ஸ் பிளஸ்’… காப்பீடு + பங்குச்சந்தை வருவாய் திட்டம்!

ந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, ‘எல்ஐசி இண்டெக்ஸ் பிளஸ்’ ( LIC Index Plus) என்ற பெயரில், பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்ட தனிநபர் சேமிப்பு திட்டமாக, புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி), தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு புதிய பாலிசி திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது அறிமுகப்படுத்தியுள்ள ‘எல்ஐசி இண்டெக்ஸ் பிளஸ்’ பாலிசி, பிப்ரவரி 6 ஆம் தேதி ( இன்று) முதல் வாங்குவதற்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘எல்ஐசி இண்டெக்ஸ் பிளஸ் திட்டம்’ என்பது ஒரு யூனிட் இணைக்கப்பட்ட வழக்கமான பிரீமியம், தனிநபர் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது, முழு பாலிசி காலத்தின் போது ஆயுள் காப்பீட்டுத் தொகையுடன் சேமிப்பையும் வழங்குகிறது. பாலிசியின் கீழ், குறிப்பிட்ட பாலிசி வருடங்கள் முடிந்தவுடன் வருடாந்திர பிரீமியத்தின் சதவீதமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகை யூனிட் ஃபண்டில் சேர்க்கப்பட்டு, யூனிட் வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும்.

இந்த திட்டத்தின் பிரீமியம், NSE NIFTY 100 index அல்லது NSE NIFTY50 index ஆகியவற்றில் உள்ள பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால், நல்ல லாபம் கிடைக்கும் என இதன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த புதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

அடிப்படை காப்பீட்டுத் தொகையைப் பொறுத்து, பாலிசிதாரரின் அதிகபட்ச வயது 50 அல்லது 60 ஆண்டுகள் வரை இருக்கலாம். முதிர்ச்சியின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் (நிறைவு) மற்றும் முதிர்ச்சியின் அதிகபட்ச வயது 75 அல்லது 85 ஆண்டுகள் ஆகும்.

மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் சேமிப்பு விருப்பத்தை அளிக்கும் பிரீமியம் திட்டமான இதில், பாலிசிதாரரின் வயது 51க்கு மேல் இருந்தால், பாலிசி கவரேஜ் 7 மடங்காகவும், 51க்கு கீழ் இருந்தால் பாலிசி கவரேஜ் 7 மற்றும் 10 மடங்காகவும் இருக்கும்

ஃப்ளெக்ஸி குரோத் ஃபண்ட் (Flexi Growth Fund ) மற்றும் ஃப்ளெக்ஸி ஸ்மார்ட் குரோத் ஃபண்ட் (Flexi Smart Growth Fund) ஆகிய இரண்டு நிதிகளில் ஒன்றை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.

திட்டம் அறிமுகம்

5 ஆண்டுகள் லாக் இன் காலம் முடிந்த பின் பகுதியளவு பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதியும் இருக்கும். முதலீட்டுடன் கூடிய ஒரு ஆயுள் காப்பீட்டு திட்டம் இது என்பதால், கூடுதல் உத்தரவாத பலன்கள் குறிப்பிட்ட நிதிகளில் யூனிட்களாக சேர்க்கப்படும். 5 ஆண்டுகள் லாக் இன் காலம் முடிந்த பின் சரண்டர் செய்து, பணம் பெற்றுக்கொள்ளலாம். இதில் கூடுதல் விபத்து காப்பீட்டையும் சேர்க்க முடியும்.

பாலிசி காலம் : வருடாந்திர பிரீமியத்தை பொறுத்து 10 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை. அதாவது, பிரீமியம் காலமும், பாலிசி காலமும் ஒன்றாகவே இருக்கும்.

குறைந்தபட்ச பிரீமியம்: ஆண்டுக்கு ரூ.30,000, அரையாண்டுக்கு – ரூ.15,000, காலாண்டுக்கு- ரூ.7,500, மாதம் – ரூ.2,500. அதிகபட்ச பிரீமியத்துக்கு எந்த வித கட்டுப்பாடும் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

有氧so young > 揮灑汗水,提高代謝量. Dancing with the stars recap for 10/26/2020 : villains night. 성공적인 온라인 강의를 위해 가장 중요한 첫 단계는 적절한 주제를 선정하는 것입니다.