‘கொட்டுக்காளி’ Review: பார்வையாளர்களுக்கு கடத்தப்படும் பதைபதைப்பு… சூரிக்குள் இப்படி ஒரு கேரக்டரா?
‘கூழாங்கல்’ படத்தின் மூலம் பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்த இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜின் அடுத்த படைப்பாக குக்கிராமத்தில் வசிக்கும் மீனா (அன்னா பென்) என்பவருக்கு பேய் பிடித்துள்ளதாக குடும்பத்தினர் நம்புகின்றனர். அவரை பேய் ஓட்டும் நபரிடம் அவரின் வருங்கால கணவரான பாண்டி (சூரி) அழைத்துச் செல்கிறார். அப்போது நடக்கும் சம்பவங்களே கொட்டுக்காளி.
வெளியாகியுள்ளது. விடுதலை, கருடன் என கமர்ஷியல் கதாநாயகனாக முத்திரை பதித்து வரும் சூரிக்கு, முற்றிலும் மாறுபட்ட படமாக குக்கிராமத்தில் வசிக்கும் மீனா (அன்னா பென்) என்பவருக்கு பேய் பிடித்துள்ளதாக குடும்பத்தினர் நம்புகின்றனர். அவரை பேய் ஓட்டும் நபரிடம் அவரின் வருங்கால கணவரான பாண்டி (சூரி) அழைத்துச் செல்கிறார். அப்போது நடக்கும் சம்பவங்களே கொட்டுக்காளி‘ அமைந்துள்ளது.
இந்திய சமூகத்தில் ஆண்களின் கௌரவம் என்பது முற்றிலும் பெண்களின் மீதே சுமத்தப்படுகிறது. இது இன்றளவும் நீடிப்பதை மறுக்க முடியாது என்பதை அழுத்தமான கதையுடன் முன்வைத்திருக்கிறார், இயக்குநர். வினோத் ராஜ்.
கிராமங்களில் நிலவும் மூடநம்பிக்கைகள், சாதி, ஆணாதிக்கம், பெண் வீட்டார் மீது காட்டப்படும் அதிகாரம் போன்றவற்றை வசனம் வழியாக, இயக்குநர் கடத்தியிருக்கிறார். மீனாவை அழைத்துச் செல்வதற்காக வரும் வாகனத்தில் நடக்கும் உரையாடல்கள், அவர்களின் நடவடிக்கைகளை இயல்பாக பதிவு செய்திருப்பது சிறப்பு.
பேய் பிடித்ததாக நம்பப்படும் மீனா, வாகனப் பயணத்தில் தெருவில் ஒலிக்கும் பாடலை முணுமுணுப்பதும் அடுத்த நிமிடமே அப்பா, மாமனார், மாமியாரை அடிக்கும் காட்சிகள் படம் பார்ப்போரை உறைய வைக்கிறது. படத்தின் நாயகனான சூரி, அன்னாபென் தவிர வேறு குறிப்பிடும்படியான பழைய முகங்கள் இல்லை.
அன்னாபென்னின் அசத்தலான நடிப்பு
படம் நெடுக கரகரப்பான குரலில் சூரி பேசுவதும் வேலைக்குச் செல்லும் ஆணவத்தில் அவர் காட்டும் அதிகாரமும் அசாத்திய நடிப்பு. அன்னாபென்னும் ஓரிரு வசனங்களை மட்டுமே பேசிவிட்டு, படம் முழுக்க தனது சிறப்பான நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார். தவிர, படம் முழுக்க எவ்வளவு அடி வாங்கினாலும் பிடிவாத குணம் கொண்டவராகவும் சூரியை ஏறெடுத்துப் பார்க்காத பெண்ணாக வலம் வந்து அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மலைக்க வைக்கும் சூரி
படத்தில் 2 நிமிட சண்டைக் காட்சியில் தனது நடிப்பை அசாத்தியமாக வெளிப்படுத்தியிருக்கிறார் சூரி. இந்த மனிதனுக்குள் இப்படியொரு நெகட்டிவ் கேரக்டரா என மலைப்பை ஏற்படுத்துகிறது. படத்தில் பின்னணி இசை இல்லை என்பது கூடுதல் ஆச்சர்யம். கதாபாத்திரங்களைச் சுற்றி எழும் சத்தங்களே பின்னணி இசை இல்லாத குறையை நிவர்த்தி செய்கின்றன.
ஆட்டோவிலேயே இடைவேளை வரை பயணிக்கும் கதையில், ஆங்காங்கே சிரித்து ரசிப்பதற்கான காட்சிகளுடன், ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்ற பதைபதைப்பையும் பார்வையாளர்களுக்கு கடத்துகிறது.
கிராமங்களில் உள்ள மேடு, பள்ளமான சாலைகளில் படம் பார்ப்பவர்களும் பயணிப்பதைப் போன்ற காட்சி அமைப்புகள், ஒளிப்பதிவாளர் சக்தியின் கைவண்ணம். படத்தில் நீளமான ஷாட்டுகளைக் குறைத்திருந்தால் பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படுவதைத் தவிர்த்திருக்க முடியும்.
படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், பேயோட்டும் காட்சிகளைப் படமாக்கிய விதத்தில், சமூகத்தில் யாருக்குப் பிடித்திருக்கிறது என்பதை பார்வையாளர்களே முடிவு செய்யும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சூரியின் பார்வையில் கதையை நிறைவு செய்திருப்பது, படம் பார்க்க வருபவர்கள் மத்தியில் எத்தகைய வரவேற்பைப் பெறும் என்பது முக்கியமான கேள்வி.
அதேநேரம், சூரி, அன்னாபென்னின் நடிப்பு, இதர கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு, கிராமத்தின் வாழ்வியலை நுட்பமாக படம் பிடித்தது, ஒளிப்பதிவு என சர்வதேச தரத்தில் ஒரு படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். விடுதலை, கருடனை தொடர்ந்து சூரியின் நடிப்புக்கு தீனி போட்டிருக்கிறது, கொட்டுக்காளி.