Amazing Tamilnadu – Tamil News Updates

காஞ்சிபுரத்தில் விரைவில் கண்ணாடி தொழிற்சாலை… 840 பேருக்கு வேலை!

காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற் பூங்காவில், ரூ.640 கோடியில் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கச் சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கி உள்ளது.

இத்தொழிற்சாலையில் நவீன முறையில் முன்-கவர் கண்ணாடி (Front cover glass) தயாரித்து, இந்தியாவில் உள்ள பேனல் தயாரிப்பாளர்கள் மற்றும் மொபைல்போன் உற்பத்தியாளர்களுக்கு வழங்க பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து, தமிழ்நாட்டில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடுகளைச் செய்து வருகின்றன.

அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த கார்னிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் இன்ஃப்ராகாம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம், 1003 கோடி ரூபாய் முதலீட்டில், 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த ஆலையை அமைக்க உள்ளது.

காஞ்சிபுரம் சிப்காட்டில் இந்த தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கையெழுத்தானது. இதைத்தொடர்ந்து, அந்த தொழிற்சாலை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வந்தன.

தொழிற்சாலையை அமைக்கச் சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், அதற்கான அனுமதியை வழங்கி உள்ளது.

இத்தொழிற்சாலையில் நவீன முறையில் முன்-கவர் கண்ணாடி (Front cover glass) தயாரித்து, இந்தியாவில் உள்ள பேனல் தயாரிப்பாளர்கள் மற்றும் மொபைல்போன் உற்பத்தியாளர்களுக்கு வழங்க பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Exit mobile version