SpaDex திட்டம்: விண்வெளியில் ‘இஸ்ரோ’ வரலாற்று சாதனை… கிடைக்கப்போகும் பயன்கள் என்ன?

ந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஆய்வு மையத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக விண்வெளியில் விண்கலன்களை ஒன்றிணைக்கும் ஸ்பேஸ் டாக்கிங் எனப்படும் ‘ஸ்பேடெக்ஸ்’ ( SpaDex) திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிட்டது.

இதற்காக கடந்த டிசம்பர் 30 ஆம் தேதியன்று ஸ்பேடேக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ( SpaDeX A, SpaDeX B )ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து, ஜனவரி 7 ஆம் தேதி அன்று முதல்முறையாக டாக்கிங் செயல்முறை நடைபெறும் என இஸ்ரோ அறிவித்திருந்தது. பிறகு. ஜனவரி 9 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால், ஜனவரி 9 ஆம் தேதி அன்றும் சிறிய தொழில்நுட்ப காரணங்களால் கடைசி நிமிடத்தில் டாக்கிங் சோதனை முயற்சி கைவிடப்பட்டு, தரவுகள் ஆராயப்பட்டு வந்தன.

இந்நிலையில், விண்வெளியில் 2 விண்கலன்களை இணைக்கும் வகையில், இஸ்ரோ செயல்படுத்தி வந்த ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சாதனை

இஸ்ரோவுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றியின் மூலம் 2 விண்கலன்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை அடைந்த உலகின் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக டாக்கிங் செயல்முறையை வெற்றிகரமாக இந்தியா நடத்திக்காட்டி உள்ளது.

விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

இந்த நிலையில், ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளுக்கு புதிய இஸ்ரோ தலைவர் நாராயணன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதேபோன்று பிரதமர் மோடி,”செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் பணியை வெற்றிகரமாக நிரூபித்ததற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஒட்டுமொத்த விண்வெளி சகோதரத்துவத்திற்கும் வாழ்த்துக்கள். இது வரும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்” என தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பயன்கள் என்ன?

மேலும் ககன்யான், இந்திய விண்வெளி நிலையமான பாரதிய அந்தரிக்ஷ் நிலையத்தை அமைப்பது உட்பட இந்தியாவின் எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு டாக்கிங் தொழில்நுட்பம் மிக முக்கியமானது. வெற்றிகரமான விண்கல டாக்கிங் பொருட்கள், உபகரணங்கள் மற்றும் விண்வெளி வீரர்களின் பரிமாற்றத்தை எளிதாக்குகிறது. அத்துடன் மேம்பட்ட மனித விண்வெளிப் பயணம் மற்றும் கிரகங்களுக்கு இடையேயான பயணங்களுக்கும் இது வழி வகுக்கும்.

‘டாக்கிங்’ இஸ்ரோவின் வருங்கால திட்டத்திற்கு மிக முக்கிய திட்டமாகும். டாக்கிங் திறன் தேவைப்படும் முதல் உண்மையான இந்திய பணி சந்திரயான்-4 ஆக இருக்கலாம். சந்திரயான்-4 திட்டத்தில் நிலவு மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் வெப்பத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படும் இந்த பணியின் ரீ-என்ட்ரி மாட்யூல் தனியாக ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.சந்திரனில் இருந்து மாதிரிகளை எடுத்துச் செல்லும் பரிமாற்ற தொகுதி பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் தொகுதியுடன் வந்து டாக்கிங் செய்யப்பட்டு பூமிக்கு கொண்டுவரப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This contact form is created using. Noleggio di cabine. hest blå tunge.