லைகா Vs ஷங்கர்: ‘இந்தியன் 3’ கைவிடப்பட்டதா? – பின்னணி தகவல்கள்

யக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ல் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வலுவாக பதிவு செய்தது.

இதன் வெற்றியைத் தொடர்ந்து, ‘இந்தியன் 2’ கடந்த ஆண்டு (2024) ஜூலை 12-ல் வெளியிடப்பட்டது. கமல்ஹாசனுடன் சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம், எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. படத்துக்கு கிளம்பிய எதிர்மறையான விமர்சனங்கள் முக்கிய காரணமாக அமைந்தன.

இந்தியன் 3: நம்பிக்கையும் சர்ச்சையும்

இந்த நிலையில், இந்தியன் 2-ன் தோல்வி அடைந்தபோதிலும், இந்தியன் 3-ன் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது படத்திற்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஷங்கர், “இந்தியன் 3 நிச்சயம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும்” என்று தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது படத்தைப் பற்றி வெளியாகி இருக்கும் புதிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. லைகா நிறுவனம் தயாரித்து வந்த இப்படத்தில், ஒரு பாடல் காட்சியை படமாக்குவதற்கு ஷங்கர் பெரிய தொகையை கோரியதாகவும், லைகா அதை கொடுக்க மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஷங்கர் படத்திலிருந்து விலகியதாகவும், ‘இந்தியன் 3’ கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

லைகா vs ஷங்கர்: மோதலின் பின்னணி

‘இந்தியன் 2’-ன் தோல்வியால் லைகா நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து, ‘இந்தியன் 3’-ன் பட்ஜெட் குறித்து ஷங்கருக்கும் லைகாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு பாடல் மற்றும் சில பேட்ச்வொர்க் காட்சிகளுக்கு சுமார் 60 கோடி தேவை என்று ஷங்கர் கோரியதாகவும், லைகா “இதுவரை செலவிட்டதைக் காட்டுங்கள், பிறகு முடிவு செய்யலாம்” என்று பதிலளித்ததாகவும், ஷங்கர் இதை ஏற்க மறுத்ததால், படம் கிடப்பில் போடப்பட்டதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

படத்தின் எதிர்காலம் என்ன?

‘இந்தியன் 3’-ன் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இறுதி கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்க லைகா தயங்குவதாக தெரிகிறது. நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட OTT தளங்களும், ‘இந்தியன் 2’-ன் தோல்வியால், மூன்றாம் பாகத்திற்கு ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் போன்ற மற்றொரு தயாரிப்பு நிறுவனம் பொறுப்பேற்று படத்தை முடிக்கலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது.

கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில் ‘இந்தியன்’ ஒரு முக்கிய படமாக இருந்தது. அதன் தொடர்ச்சி இப்படி தடைபடுவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. ஷங்கரின் சமீபத்திய படமான ‘கேம் சேஞ்சர்’ தோல்வியடைந்ததால், அவரது பெயரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ‘இந்தியன் 3’ வெளியானால், இந்த தோல்விகளை மறைக்கும் வாய்ப்பாக அமையலாம். ஆனால், தற்போதைய நிலையில், படத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

“not just the people he worked with, but how he viewed life and what he gave,” she continued. 지속 가능한 온라인 강의 운영. Location de vacances rue arsene houssaye, paris 8Ème.