“அன்றாட வாழ்க்கையில் மாற்று திறனாளிகளின் சிரமம்…” – சென்னை ஐஐடி-யின் நம்பிக்கை தரும் முயற்சி

நம் சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்கின்ற சவால்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் ஒரு நெகிழ்ச்சியான முயற்சியை சென்னை ஐஐடி (IIT-Madras) தொடங்கியுள்ளது.
‘ஆர்2டி2’ (R2D2 – Rehabilitation Research and Device Development) எனப்படும் இந்த மையத்தின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட குறும்படம், மாற்றுத்திறனாளிகள் தினசரி வாழ்வில் சந்திக்கும் தடைகள் மற்றும் அவற்றுக்கு தீர்வு காணும் முனைப்பை உள்ளடக்கியுள்ளது.
பிரசார நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த குறும்படம், பொது இடங்கள், போக்குவரத்து மற்றும் சமூக மனப்பான்மைகளில் உள்ள தடைகள், மாற்றுத்திறனாளிகளாக உள்ள லட்சக்கணக்கான கணக்கான மக்களின் வாழ்க்கையை எவ்வாறு கடினமாக்குகின்றன என்பதை விவரிக்கிறது.
நம் சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்கின்ற சவால்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் ஒரு நெகிழ்ச்சியான முயற்சியை சென்னை ஐஐடி (IIT-Madras) தொடங்கியுள்ளது.
மாற்று திறனாளிகளின் அன்றாட சிரமம்
அதாவது மாற்றுத்திறனாளி ஒருவரின் அன்றாட வாழ்க்கையை நல்ல உடல் நிலையில் இருக்கும் மற்றொருவர் உடன் ஒப்பிட்டு காட்டுகிறது. இருவரும் ஒரே நாளை ஆரம்பிக்கிறார்கள். ஆனால், மாற்றுத்திறனாளி பெண்மணி வீட்டிலிருந்து வெளியேறும் முதல் நிமிடத்திலிருந்தே சவால்களை எதிர்கொள்ளத் தொடங்குகிறார். படிக்கட்டுகள், லிப்ட் இல்லாத கட்டடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள் இல்லாதது போன்றவை மாற்றுத்திறனாளி பெண்ணின் தினசரி வாழ்க்கையை கடினமாக்குகின்றன.
இந்தியாவில் 9 கோடி முதல் 13 கோடி வரை மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் உணவகங்கள், பூங்காக்கள், திரையரங்குகள் எனப் பல பொது இடங்களில் கூட இந்த மக்களுக்கு எளிமையான அணுகல் இல்லை.

வாழ்க்கையை எளிமையாக்கும் நவீன தொழில்நுட்பங்கள்
இதனை கருத்தில் கொண்டே ஆர்2டி2 குழுவில் இந்திய சாலைகள் மற்றும் கிராமப்புற நிலப்பரப்புகளுக்கு ஏற்ற வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இயக்க உதவிகள் வடிவமைக்கப்படுகின்றன. அதிகம் செலவாகாத, ஆனால் நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட இந்த சாதனங்கள், மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை எளிமையாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்படுகின்றன. இந்தக் குழுவில் பொறியியலாளர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருடன் 40 க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பணியாற்றுகிறார்கள்.
மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கே உரிய சாதனங்களை உருவாக்கும் செயல்முறையில் தொடக்கத்திலிருந்தே பங்கேற்க வேண்டும் என்பது இந்த குழுவின் முக்கியக் கோரிக்கையாகும். அவ்வாறு இடம்பெறுவது, அந்த சாதனங்கள் உண்மையில் பயனுள்ளவையாக இருப்பதை உறுதி செய்யும்.
இது கருணையல்ல… மனித உரிமை!
இந்த முயற்சியில் சமூக விருப்பம் மற்றும் பொறுப்புணர்வும் மிக முக்கியம். இதனை கருத்தில்கொண்டே, நிறுவனங்கள் தங்களது கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொழில்நுட்பங்களை எளிதாகக் கிடைக்கச் செய்ய முடியும்.
இந்த குறும்படம் நமக்கு சொல்வது ஒன்றே – நாம் மாற்றம் தேவைப்படும் சமுதாயத்தில் வாழ்கிறோம் – என்பதுதான். மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே தங்கள் வாழ்க்கையை போராடியே வாழ்கிறார்கள். என்வே, அவர்களுக்கு நாம் உதவினால் அவர்களுக்கான சிரமங்கள் குறையும். அந்த வகையில் நடைபாதை, கட்டடங்கள், போக்குவரத்து மற்றும் வேலைவாய்ப்புகள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான இடம் ஏற்படுத்தப்பட்டால்தான் உண்மையான சமத்துவம் ஏற்படும்.
இது கருணையல்ல… மனித உரிமை!
வீடியோ லிங்க்: