இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆனார் குகேஷ்… அர்ஜூன் எரிகைசியை முந்தினார்!

மிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் FIDE தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், நடப்பு சாம்பியனான சீனாவைச் சேர்ந்த டிங் லிரெனை வீழ்த்தி, இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் வெற்றிப் பெற்றார். இதன் மூலம், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் என்ற பெருமையை குகேஷ் பெற்றார்.

முன்னதாக, ரஷ்யாவைச் சேர்ந்த கேரி கேஸ்ப்ரோ 22 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றதே சாதனையாக இருந்து வந்தது. மேலும், விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இரண்டாவது தமிழக வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றார்.

இந்த நிலையில், FIDE தரவரிசையில் அதிவேகமாக முன்னேறி தற்போது நான்காவது இடத்தில் உள்ளார். இதன் மூலம் அவர் FIDE தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் குகேஷ்.

தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், குகேஷ் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த நிலையில், FIDE தரவரிசையில் 2784 புள்ளிகளுடன் முன்னேற்றம் கண்டுள்ளார். சமீபத்தில், தியான் சந்த் கேல் ரத்னா விருது வென்ற குகேஷ், விருது பெற்ற கையோடு நெதர்லாந்து புறப்பட்டு வந்து, விளையாடி வருகிறார்.

இந்த முன்னேற்றத்தினால், நீண்ட காலமாக அதிக புள்ளிகளைக் கொண்ட இந்திய வீரரான அர்ஜூன் எரிகைசியை தற்போது குகேஷ் முந்தியுள்ளார். இதன் காரணமாக அர்ஜூன், தற்போது 2779.5 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன், 2832.5 புள்ளிகளுடன் உலகளவில் முதலிடத்தில் தொடர்கிறார். இவரைத் தொடர்ந்து அமெரிக்காவின் கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகமுரா (2802) மற்றும் அவரது சக நாட்டு வீரர் ஃபேபியானோ கருவானா (2798) ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bilim politikaları İnsan ve kainat. The ultimate luxury yacht charter vacation. hest blå tunge.