Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

Google Pay பரிவர்த்தனைக்கு இனி சேவைக் கட்டணம்… எந்த பில்களுக்கெல்லாம் வசூலிக்கப்படும்?

ந்தியாவின் முன்னணி UPI அடிப்படையிலான கட்டண தளங்களில் ஒன்றான கூகுள் பே (Google Pay), கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பில் செலுத்துதல்களுக்கு சேவை கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுவரை இந்த ஆப்களில் பணம் பரிமாற்றத்துக்கு எந்த கட்டணமும் விதிக்கப்படாமல் இருந்தது. அதாவது சப்ஸ்க்ரிப்ஷன் போல எதுவுமே இல்லை. இலவசமாக பதிவிறக்கம் செய்து வங்கி கணக்கு வைத்திருக்கும் யார் வேண்டுமென்றாலும் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம். ஆனால், இப்போது சில வசதிகளுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த கட்டணமும் இன்றி இந்த ஆப்கள் செயல்படுவதால், அந்த நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாலேயே இந்த கட்டண விதிப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கூகுள் பே நிறுவனமானது தன்னுடைய சேவை கட்டணத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் google pay மூலமாக நாம் செலுத்தக்கூடிய கட்டணங்களுக்கு 0.5% முதல் 1% வரை சேவை கட்டணம் மற்றும் அவற்றிற்கான ஜி எஸ் டி சேர்க்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சேவை கட்டணம் ஆனது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு இரண்டிற்கும் பொருந்தும். உதாரணமாக ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய கிரெடிட் கார்டு மூலம் மின்சாரம் , கேஸ் சிலிண்டர் புக்கிங் அல்லது குடிநீர் கட்டணத்தை செலுத்தும் பொழுது 15 ரூபாய் வரை சேவை கட்டணமாக பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதே சமயம் UPI ஐ பயன்படுத்தி வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகச் செய்யப்படும் கட்டணங்களுக்கு இந்த சேவை கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

PhonePe மற்றும் Paytm போன்ற போட்டியாளர்களும் பில் செலுத்துதல், ரீசார்ஜ் செய்தல் மற்றும் பிற சேவைகளுக்கு இதே போன்ற கட்டணங்களை வசூலிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version