GIM2024 முதலீடு: எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பேருக்கு வேலை?

சென்னையில் நடந்து முடிந்த இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், சுமார் 6.5 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த முதலீடுகள் தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களுக்குச் செல்கின்றன, எந்தெந்த நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன, இதனால் எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்த விவரங்களை இங்கே விரிவாக தெரிந்துகொள்ளலாம்…

தமிழகத்தை, வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் ( ஒரு லட்சம் கோடி) அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கை, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார்.

முதலமைச்சரின் இந்த இலக்கு என்பது பரவலாக்கப்பட்ட வளர்ச்சி, அனைவருக்கும் எல்லாம் என்பது தான். படித்த இளைஞர்களுக்கும், கிராமப்புற பெண்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் மிக தீவிரமாக செயல்பட்டு, அதுபோன்ற வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார்.

இந்த மாநாட்டின் மூலமாக, தமிழகத்தின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே முதலமைச்சரின் நோக்கம் ஆகும். தென் தமிழகத்திற்கும், மேற்கு தமிழகத்திற்கும், டெல்டா மாவட்டத்திற்கும், வட தமிழகத்திற்கும் சென்னைக்கும் சேர்த்து அனைத்து பகுதிகளும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி இருக்க வேண்டும் என எண்ணியே இந்த முதலீடுகள் வரப்பெற்றுள்ளது.

இந்த நிலையில், கடந்த 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், மொத்தம் ரூ. 6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 26 லட்சத்து 90 ,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு வேலை வாய்ப்பு?

இந்த நிலையில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் திரட்டப்பட்ட இந்த 6.64 லட்சம் கோடி முதலீடுகள், எந்தெந்த மாவட்டங்களுக்குச் செல்கின்றன, இதனால் எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்த முழுமையான விவரங்கள் இங்கே…

First Solar

முதலீடு ரூ.5,600 கோடி – வேலை வாய்ப்பு 1,100 பேர் – காஞ்சிபுரம்

JSW Renewable

முதலீடு ரூ.12,000 கோடி – வேலை வாய்ப்பு 6,600 பேர் – தூத்துக்குடி & திருநெல்வேலி

Tata Electronics

முதலீடு ரூ.12,082 கோடி – வேலை வாய்ப்பு 40,500 பேர் – கிருஷ்ணகிரி

TVS Groups

முதலீடு ரூ.5,000 கோடி – வேலை வாய்ப்பு 500 பேர்

Mitsubishi

முதலீடு ரூ.200 கோடி – வேலை வாய்ப்பு 50 பேர் – திருவள்ளூர்

Hyundai

முதலீடு ரூ.6,180 கோடி – காஞ்சிபுரம்

Vinfast

முதலீடு ரூ.16,000 கோடி – தூத்துக்குடி

Godrej Consumer

முதலீடு ரூ.515 கோடி – செங்கல்பட்டு

Pegatron

முதலீடு ரூ.1,000 கோடி – வேலை வாய்ப்பு 8,000 பேர் – செங்கல்பட்டு

Tata Power

முதலீடு ரூ.70,800 கோடி – 3,800 பேருக்கு வேலை வாய்ப்பு – தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும்.

Stellantis Group

முதலீடு ரூ. 2,000 கோடி – திருவள்ளூர்

Festo India:

முதலீடு ரூ.520 கோடி – கிருஷ்ணகிரி மாவட்டம் – 2000 பேருக்கு வேலை வாய்ப்பு

ENES Ramraj

முதலீடு ரூ.1,000 கோடி – 13,000 பேருக்கு வேலை வாய்ப்பு

Adani Groups

முதலீடு ரூ.42,768 கோடி – 13,000 பேருக்கு வேலை வாய்ப்பு

Tata chemicals

முதலீடு ரூ.1,000 கோடி – 500 பேருக்கு வேலை வாய்ப்பு – ராமநாதபுரம் மாவட்டம்

CPCL

முதலீடு ரூ.17,000 கோடி – 2,400 பேருக்கு வேலை வாய்ப்பு – நாகை மாவட்டம்

Royal Enfield

முதலீடு ரூ.3,000 கோடி – 2,000 பேருக்கு வேலை வாய்ப்பு – காஞ்சிபுரம் மாவட்டம்

Mahindra

முதலீடு ரூ.1,800 கோடி – 4,000 பேருக்கு வேலை வாய்ப்பு – திருவள்ளூர் மாவட்டம்

Hinduja Groups

முதலீடு ரூ. 2,500 கோடி – 300 பேருக்கு வேலை வாய்ப்பு

Microsoft India

முதலீடு ரூ. 2,700 கோடி -167 பேருக்கு வேலை வாய்ப்பு – சென்னை.

Feng Tay

முதலீடு ரூ. 500 கோடி – விழுப்புரம்

High glory footwear

முதலீடு ரூ. 2,302 கோடி – கள்ளக்குறிச்சி

Zhong Bu

முதலீடு ரூ. 48 கோடி – பெரம்பலூர்

TKG Taekwang

முதலீடு ரூ. 1,250 கோடி

Hong Fu

முதலீடு ரூ. 1,500 கோடி – ராணிப்பேட்டை

Long Yin

முதலீடு ரூ. 500 கோடி – ராணிப்பேட்டை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2020 leroy agency press + direct news today + 1 news today broadcasting + erika leroy de saxe. Br450c ef stihl archives startekbv de bron van groene innovatie. Bûches calorifiques woodstock 1 palette , sacs de 5 bûches.