சென்னை புயல், மழை: மீட்பு நடவடிக்கை தீவிரம்… உதவி எண்கள் அறிவிப்பு!

ங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று இரவுக்குள் மாமல்லபுரம் – மரக்காணம் இடையே கரையை கடக்கலாம். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்யத் தொடங்கி இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டாலும் தொடர் மழை காரணமாக மழை நீர் தேங்குகிறது.

காற்று பலமாக வீசுவதால் பல பகுதிகளில் அதிகாலையிலேயே மின் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் வீடுகள் இருளில் மூழ்கின. திருநின்றவூர்-திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் மையத்தடுப்பு சுவர் வரை தண்ணீர் பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை.

மணலி விரைவு சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் கனரக வாகனங்கள் கூட செல்ல முடியாதபடி தத்தளித்தன.எம்.ஜி.ஆர். நகரில் இடுப்பளவு வெள்ளம் சூழ்ந்துது.கார்கில் நகர், ராஜாஜி நகர்,சத்தியமூர்த்தி நகர் ஆகிய இடங்களில் குடியிருப்புகளை சுற்றி வெள்ளம் தேங்கியது.ராயபுரம் மாதா சர்ச் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகர், ராயபுரம், ஆட்டு தொட்டி, மின்ட் தெரு, வால்டாக்ஸ் ரோடு ஆகிய இடங்களிலும் மழை நீர் வெள்ளமாக காட்சி அளித்தது.இதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

தீவிர மீட்பு நடவடிக்கைகள்

புயல் காரணமாக சென்னையில் அதிகாலை முதல் கன மழை பெய்து வருவதன் காரணத்தினால் சாலைகளில் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமைச்சர் எ.வ.வேலு, அதிகாரிகளுடன் சென்று கோயம்பேடு அருகில் உள்ள பெரியார் பாதையை ஆய்வு செய்தார்.

மழை மற்றும் காற்று காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் விழுந்து கிடக்கும் மரங்களை வெட்டி ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நிவாரண முகாம்களில் தஞ்சம்

இந்த நிலையில், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு வழங்க வேண்டிய உணவை மாநகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்காக 39 சமையல் கூடங்களில் 2,23,700 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அம்மா உணவகங்களில் இலவச உணவு

மேலும், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மழை காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.இதனிடையே மழைக் காலங்களில் தொற்று நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க மருத்துவ முகாம்களை நடத்தவும், அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளுடன் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

‘வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்’

இந்த நிலையில், பொதுமக்கள் மிக அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் என
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

உதவி எண்கள் அறிவிப்பு

இந்த நிலையில், மழை தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சென்னைவாசிகளுக்கு உதவிக்கான தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாநில உதவி எண்: 1070
மாவட்ட உதவி எண்: 1077
WhatsApp உதவிக்கு : 9445869848

அவசர தொடர்பு எண்கள்:

சென்னை மாநகராட்சி: 1913
மின்சார சேவைகள்: 94987 94987
குடிநீர் விநியோகம்: 044-4567 4567
பாம்பு மீட்புக் குழு: 044-2220 0335
சென்னை மெட்ரோ ரயில்: 1860 425 1515
புளூ கிராஸ்: 9677297978, 9841588852, 9176160685
பெண்கள் உதவி எண்: 181
சைல்டுலைன்: 1098

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advantages of local domestic helper. Срок регистрации домена истек. Стандартный вход на omg omg начинается с капчи.