ஈரோடு (கி) இடைத்தேர்தல் முடிவு: வெற்றியை நோக்கி திமுக … அதிமுக வாக்குகள் யாருக்குப் போனது?

ரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கிய நிலையில், எதிர்பார்த்தபடியே திமுக வெற்றி பெறும் அளவுக்கான வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், ‘இந்தியா’ கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மா.கி.சீதாலட்சுமி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் 13 வேட்பாளர்கள் மற்றும் 31 சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

வாக்கு எண்ணிக்கை

இந்த நிலையில், இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8.30 மணிக்கு தொடங்கியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் எண்ணப்பட்டு வருகின்றன.

தொடக்கம் முதலே திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை வகித்து வந்த நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன.

வெற்றியை நோக்கி திமுக

மதியம் 2 மணி அளவில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 61,834 வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு 13,466 வாக்குகளே கிடைத்துள்ளன. திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களைத் தொடர்ந்து நோட்டா 769 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

முன்னிலை நிலவரம் ( மதியம் 2 மணி )

திமுக – 61,834
நாம் தமிழர் கட்சி – 13,466

நாம் தமிழர் கட்சியின் எதிர்பார்ப்பு

இன்று மாலைக்குள் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டு விடும். அதிமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிடாத நிலையில், அக்கட்சிகளின் வாக்குகள் கணிசமாக தங்களுக்கு கிடைக்கும் என நாம் தமிழர் கட்சி தரப்பில் எதிர்பார்ப்பு நிலவியது. வெற்றி பெற வாய்ப்பில்லை என்றபோதிலும், கவுரமான வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்பதும் அக்கட்சியின் எதிர்பார்ப்பதாக இருந்தது.


வி.சி.சந்திரகுமார் – சீதாலட்சுமி

அத்துடன் தந்தை பெரியார் குறித்து சமீபத்தில் சீமான் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே சமயம், பெரியார் மீதான தனது விமர்சனம் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் வாக்குகளை தங்கள் கட்சிக்கு பெற்றுத்தரும் என்ற எதிர்பார்ப்பும் சீமானுக்கு இருந்ததாக கூறப்பட்டது. அதன்படி பாஜக ஆதரவு வாக்குகள் ஓரளவுக்கு சீமான் கட்சிக்கு கிடைத்துள்ளது. ஆனால், அதிமுக உள்ளிட்ட இதர எதிர்க்கட்சிகளின் வாக்குகள் அக்கட்சிக்குப் பெரிய கிடைக்கவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதே சமயம், கடந்த தேர்தலைவிட இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

முன்னதாக பெரியார் மீதான விமர்சனத்தால் அதிருப்தியுற்ற மே 18 இயக்கத்தினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட பெரியாரிய ஆதரவாளர்கள் நாம் தமிழர் கட்சிக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டனர்.

அதிமுக வாக்குகள் யாருக்கு போனது?

அதே சமயம் திமுக தரப்பில், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு டெபாசிட்டே கிடைத்துவிடக்கூடாது என்ற அளவுக்கு களப்பணிகளும் பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டன. கூடவே முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக வாக்குகளை தங்கள் கட்சிக்கு ஆதரவாக வளைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் ஒரு பகுதியாக அக்கட்சியின் முக்கிய உள்ளூர் நிர்வாகிகளை ‘சரி கட்டும்’ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதிமுக தரப்பிலும், நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளைப் பெறுவதை விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இவையெல்லாம் சேர்ந்தே நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்குப் பெரிய அளவில் வாக்குகள் கிடைக்காமல் போனதற்கான காரணங்களாக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

二、新北市:healthy new taipei 社群. Tonight is a special edition of big brother. : 작은 프로젝트부터 시작할 수 있는 플랫폼.