Amazing Tamilnadu – Tamil News Updates

சொந்த தொழில் தொடங்க ஆர்வமா? அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயிற்சி தரும் தமிழக அரசு!

சுயமாக தொழில் தொடங்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு குறைந்த முதலீட்டில், உத்தரவாதமான வருவாய் தரக்கூடிய வகையிலான பல்வேறு தொழிற் பயிற்சிகளை தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் அளித்து வருகிறது.

குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது. எனவே, பயிற்சி முடித்தவுடன் அவரவர் திறனைப் பொறுத்து உடனடியாகவோ அல்லது ஏதாவது ஒரு சிறிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, ஓரிரு மாதங்கள் பணியாற்றிய பின்னரோ சொந்தமாக தொழில் தொடங்கலாம்.

அந்த வகையில், தற்போது தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், மூலிகை அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சியை அளிக்க உள்ளது.

பயிற்சி நாள்/ நேரம்

மார்ச் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை.

காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

இப்பயிற்சியில் தேங்காய் எண்ணெய் சோப்பு, மூலிகை சோப்பு, ஆயுர்வேத சோப்பு, முடி வளரும் எண்ணெய், முடி வளரும் ஷாம்பு, ஃபேஸ் வாஷ் ஜெல், கை கழுவும் திரவம் மற்றும் பயிற்சி வழிமுறைகளுடன் சுயமாக தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தங்கும் விடுதி

இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னையில் பங்குபெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு…

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600032.

தொலைபேசி /கைபேசி எண்கள்: 8668108141/8668102600/7010143022.

முன்பதிவு அவசியம், அரசு சான்றிதழ் வழங்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version