Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

காய்ச்சல், ரத்த அழுத்தம், வைட்டமின்… 50 தரமற்ற மருந்து, மாத்திரைகள்!

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்துகளை சிடிஎஸ்சிஓ எனும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO or Central Drugs Standards Control Organisation)ஆய்வு செய்வது வழக்கம். இதன் மூலம் போலியான, தரமற்ற மருந்துகள் கண்டறியப்படும்.

இந்த நிலையில் காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட நோய்களுக்கு இந்தியாவில் விற்கப்படும் 53-க்கும் அதிகமான மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

பொதுவாக சளி, காய்ச்சல், தலைவலி போன்ற உடல் பிரச்னைகளுக்கு பாராசிட்டமால் பரிந்துரைக்கப்படுகிறது. பொதுமக்களில் பலரிடையே தலைவலி வந்தாலோ, சளி, காய்ச்சல் இருந்தாலோ மருத்துவரை அணுகாமல் பாராசிட்டமால் வாங்கி உட்கொள்ளும் பழக்கமும் காணப்படுகிறது. இந்த நிலையில் தான், தரமற்ற மருந்துகள் பட்டியலில் பாராசிட்டமால் மாத்திரையும் இடம்பெற்றுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தவிர, வைட்டமின் சி, வைட்டமின் டி3 ஷெல்கால் (Shelcal), வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி குறைபாட்டுக்கான softgels, antiacid Pan-D, Paracetamol tablets IP 500 mg, சர்க்கரை நோய்க்கான Glimepiride, உயர் ரத்த அழுத்தத்திற்கான Telmisartan உள்ளிட்ட மாத்திரைகளும் தரமற்ற மருந்துகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர வயிற்று தொற்று பிரச்சனைக்கு எடுத்து கொள்ளப்படும் மெட்ரோனிடாசோல், அன்டிபயோடிக்ஸ் மாத்திரையான Clavam 625, Pan D, குழந்தைகளுக்கான பாக்டீரியா தொற்றை குணப்படுத்த பயன்படுத்தப்படும்ஹெட்டரோவின் செபோடெம் எக்ஸ்பி 50 மாத்திரைகளும் தரமின்றி உள்ளது.

இந்த நிலையில், “ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மருந்துகள் போலியானவை, அவை சந்தையில் மிக எளிதில் கிடைக்கின்றன. இவற்றை நாங்கள் உற்பத்தி செய்யவில்லை” என அந்தந்த மருந்துகளை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.

Exit mobile version