முடிந்தது தீபாவளி… சென்னை திரும்ப 7,605 சிறப்பு பேருந்துகள்!

தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தீபாவளிக்கு முந்தைய 3 நாட்களில் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தமாக 10,784 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த சிறப்பு பேருந்துகளில் 5.76 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர்.

இந்த நிலையில், சொந்த ஊர் சென்றவர்கள், மீண்டும் ஊர் திரும்ப வசதியாக போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இன்று முதல் 4 ஆம் தேதி வரை 7,605 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,092 சிறப்பு பேருந்துகளுடன் 600 சிறப்பு பேருந்துகளும், நாளை 1,735 பேருந்துகளும், நாளை மறுநாள் 830 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல, பிற முக்கிய நகரங்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 3,405 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளி விடுமுறை முடிந்து, வரும் திங்கட்கிழமை பலர் பணிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை அதிகப்படியானோர் ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி இன்றும், நாளையும் சென்னையை நோக்கி வருவோர், அவரவர் பகுதிகளுக்குச் செல்லும் வகையில் மாலை, இரவு நேரங்களில் கூடுதலாக 100 பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்க உள்ளது.

ஆம்னி பேருந்துகள் மீது புகார்

இதற்கிடையே, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நெல்லையில் இருந்து சென்னைக்கு இருக்கையில் பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.1,700, படுக்கையில் பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.2,200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.4,500 வசூலிக்கப்படுகிறது. இதேபோல் நாகர்கோவில், மதுரை ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகளிலும் அதிகபட்சமாக ரூ.4,500 வரை வசூலிக்கப்படுவதாக தனியார் முன்பதிவு செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு கவனம் செலுத்தி, கட்டணத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உதவிக்கு அழைக்க…

இந்த நிலையில், பேருந்து இயக்கம் தொடர்பான உதவிகளுக்கு 7845700557, 7845727920, 7845740924, 94450 14436 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044 2474 9002, 044 2628 0445, 044 2628 1611 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். பெறப்படும் புகார்களின் அடிப்படையில் அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facing wаr іn thе mіddlе eаѕt and ukraine, thе us lооkѕ fееblе. Le premier ministre michel barnier a été opéré d’une « lésion cervicale » le week end dernier. Kim jong un’s us$400 million hackers.