Amazing Tamilnadu – Tamil News Updates

‘துருவ நட்சத்திரம்’ Vs ‘ரெட்ரோ’ … ஒரே நாளில் போட்டி!

வுதம் மேனன் இயக்கத்தில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரம், விநாயகன், சிம்ரன், ராதிகா, ரீத்து வர்மா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படம் பல்வேறு பிரச்னைகளால் சில ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்தது. பலமுறை வெளியீட்டுக்கு முயற்சித்தும் திட்டமிட்டப்படி நடைபெறவில்லை. சமீபத்தில் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த சுந்தர் சி இயக்கத்தில் உருவான‘மதகஜராஜா’ படம், சுமுகமான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியானாது. அப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதால் வசூலையும் வாரிக் குவித்தது.

இந்த நிலையில், நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட ‘துருவ நட்சத்திரம்’ படமும் வெளியாக உள்ளது. மே 1-ம் தேதி அன்று‘துருவ நட்சத்திரம்’ படத்தினை வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. கேரளா விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து மே 1-ம் தேதி வெளியீடு என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்பட்டு கண்டிப்பாக வெளியாகிவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

போட்டிப் போடும்‘ரெட்ரோ’

இதனிடையே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படமும் மே 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், ‘துருவ நட்சத்திரம்’ படமும் அதே தேதியில் வெளியாகும் பட்சத்தில் இரு படங்களுக்கும் இடையே போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் சூர்யாதான். அப்போது கவுதம் மேனனுடன் ஏற்பட்ட மனகசப்பில் தான் அப்படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version