சென்னை கடற்கரை – அரக்கோணம்: இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், இன்று செப்.18 மற்றும் நாளை மறுதினம் செப். 20 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இரவு 8.25, 8.55, 10.20 மணிக்கும், திருவள்ளூருக்கு இரவு 8.05 மணிக்கும், கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.45மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை (செப்.18, 20) ரத்து செய்யப்படும்.

கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு அதிகாலை 4.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் வியாழன் மற்றும் சனிக்கிழமை (செப்.19, 21) ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும். மறுமாா்க்கமாக திருவள்ளூரில் இருந்து இரவு 9.35 மணிக்கும், கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 9.55 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும்.

மேலும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு புறப்படும் ரயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படும். கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 10.10, 10.40, 11.15 மணிக்கு வரும் ரயில்களும், செங்கல்பட்டு, திரமால்பூரில் இருந்து இரவு 8, 9.10, 10.10, 11 மணிக்கு வரும் ரயில்களும் எழும்பூருடன் நிறுத்தப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dprd kota batam. Big brother all stars recap for 9/9/2020 : who won pov ?. microsoft news today.